புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 29, 2020)

காலத்தைப் பிரயோஜனப்படுத்துங்கள்

எபேசியர் 5:16

நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.


தேவ வார்த்தையின்படி, தேசத்தை ஆளும் அதிகாரிகளுக்காகவும், தேசத்தின் சுபீட்சத்திற்காவும் காலையிலே ஜெபம் செய்த மனிதன், மாலையிலே தன் நண்பர்களோடு ஒன்றுகூடி அரசியல் பேசும் போது, தன்னை அறியாமலே, காலையில் எவர்களுக்காக ஜெபித்தாரோ, அவர்கள் ஒன்றுக்கும் உதவ மாட்டார்கள் என சபித்து விட்டான். இந்த மனிதனுடைய சிந்தையை மேற்கொண் டிருப்பது எது? தேவனுடைய வார்த் தையா அல்லது இந்த உலக போ க்கா? மனிதர்கள், நாளாந்தம் ஊடக ங்கள் வழியாக பற்பல செய்திகளை யும், கட்டுரைகளையும், கதைகளையும் வாசிப்பதாலும், கேட்பதாலும், பலவித மான காட்சிகளை பார்ப்பதாலும் தங் கள் சிந்தைகளை அவைகளால் நிறைத்துக் கொள்கின்றார்கள். அவை களில் பாவம் இல்லை என்று கூறி அதிக திகமாக அவைகளையே செய்து வருகின்றார்கள். எவை சரி எவை பிழை என்பதை தர்க்கிக் காமல், உங்கள் இருதயம் எதினால் மேற்கொள்ளப்படிருக்கின்றது என நீங்கள் ஆராய்ந்து அறிய வேண்டும். உங்கள் சிந்தை எதினால் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றதோ அவை உங்கள் வாழ்க்கையை கட்டுப்ப டுத்தி ஆளுகை செய்யும். பரலோகத்திற்குரியவைகள் உங்கள் சிந் தையை மேற்கொண்டிருந்தால், இயேசு கொடுத்த சமாதானம் உங்களை ஆண்டு கொள்ளும். இந்த உலகத்தின் போக்குகளால் உங்கள் சிந் தையை நீங்கள் நிரப்பினால் அவை உங்கள் மன நிம்மதியை கெடுத்து விடும். உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவை களோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன் புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணி யம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டி ரு ங்கள். நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இரு க்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்க ளோடிருப்பார் என்று தேவ ஊழியராகிய பவுல் அறிவுரை கூறியுள்ளார். பிரியமானவர்களே, இந்நாட்களிலே தேவ னுடைய வார்த்தையை வாசிப்பதிலும், கேட்பதிலும், தியானிப்பதிலும், அதன்படி நடப்பதிலும் சிந்தையுள்ளவர்களாக இருங்கள். சங்கீதங்க ளினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக் கொருவர் புத்திசொல்லிக் கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணிக் கொண்டிருங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, இந்த நாட்களை பிரயோஜனப்படுத்த த்தக்கதாக அதிகதிகமாக உம்முடைய வார்த்தையை வாசிக்கவும், கேட்க வும், தியானிக்கவும், அவற்றை கைகொள்ளவும் என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளி 22:11