புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 28, 2020)

நன்றியைத் தெரிவியுங்கள்

கொலோசெயர் 3:15

தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்க டவது, இதற்கென்றே நீங் கள் ஒரே சரீரமாக அழை க்கப்பட்டீர்கள்; நன்றியறி தலுள்ளவர்களாயுமிருங்கள்.


ஊரிலுள்ள சனசமூக நிலையத்தின் அங்கத்தவராக இருந்த ஒரு மனி தனானவன், நிலையத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் சீராக செல்லும் போது அதை குறித்து எந்த நன்றியையும் பராட்டலையும் ஒருபோதும் தெரிவிப்பதில்லை. ஆனால், ஏதாவது குற்றங் குறைகளை காணும் போது மட்டும் அதை தவறாமல் சுட்டிக் காட்டி அதை நிலை யத்தின் நிர்வாக உறுப்பினர்களிடம் தெரி யப்படுத்தி வந்தான்;. அவனுடைய பார் வையிலே தான் நிலையத்தின் முன்னே ற்றத்திற்காக உழைக்கின்றேன் என்று எண்ணி வந்தான். இப்படியாக அவன் சில வருடங்களாக செய்து வந்ததால், இந்தச் செய்கையானது அவனுடைய சுபாவமாகவே மாறிவிட்டது. குறை வு கள் இருக்கும் இடத்திலே அவன் கண் களும் இருந்தது. அருமையான சகோ தர சகோதரிகளே, எங்கள் நாளாந்த வாழ்க்கையிலே குடும்பத்தில், வேலை யில், நண்பர் உறவினர் மத்தியில், அயலில், சபை ஐக்கியத்தில், மற்றும் ஊரில், நாட்டில், உலகிலுள்ள அமைப்புக்களில் ஆங்காங்கே குறைவு களை காண்கின்றோம். தன் சரீரத்திலிருக்கும் குறைவை அல்லது நோ யை பற்றியே ஒரு மனிதன் எப்போதும் பேசிக் கொண்டிருப்பானாக இரு ந்தால், அவன் தன் வாழ்க்கையிலே எதையுமே செய்து முடிக்க மாட் டான். இப்படியாக சில மனிதர்கள் வாழ்க்கையின் குறைகளிலே மட்டு மே தரித்து நிற்பதினால் சுபாவமாக முறுமுறுக்கின்றவர்களாக மாறிவிடு கின்றார்கள். நீங்கள் அப்படியிராமல், உங்கள் வாழ்க்கையில் தேவன் செய்த நன்மைகளை குறித்து நன்றியறிதலுள்ளவர்களாயிருங்கள். நன் மையான கிரியைகளை மற்றவர்கள் செய்யும் போது மனதார பாராட்டப் பழகிக் கொள்ளுங்கள். உங்களுக்கு உதவி செய்யும் மனிதர்களுக்கு நன் றியைத் தெரிவியுங்கள். கண் கண்ட சகோதரனை அன்பு செய்யாதவன் கண் காணா தேவனை எப்படி அன்பு செய்வான் என்பது போல, கண் கண்ட தன் பிறனுக்கு நன்றியறிதலில்லாதிருப்பவன் கண்காணாத தேவ னுக்கு எப்படி நன்றியறிதலுள்ளவனாக இருப்பான்? இந்த ஆண்டை திரும்பி பாருங்கள். சிறிதாயினும் பெரிதாயினும் உங்களுக்கு உதவி செய்தவ ர்களுக்கு மனதார நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுங்கள். மனித தயவுகளுக்காக தேவனை ஸ்தோத்தரியுங்கள். எல்லாச் சூழ்நிலைக ளிலும் தேவ சமாதானத்தை காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

சமாதானத்தின் தேவனே, கடந்த நாட்களிலே நீர் தந்த மனித தயவுகளுக்காக நன்றி செலுத்துகின்றேன். எப்போதும் நன்றியை சொல்லுபடிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:4-6