புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 27, 2020)

மனதுருகும் தெய்வம் இயேசு

லூக்கா 19:10

இழந்துபோனதைத் தேட வும் இரட்சிக்கவுமே மனு ஷகுமாரன் வந்திருக்கி றார் என்றார்


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதன் தன் குடும்பத்தின் தேவைகளை சந்திக்க வழி தெரியாமல், களவு செய்த போது, கையும்மெய்யுமாக பிடிபட்டு, ஊரின் தலைவர்களால் விசாரிக்கப்பட்டான். ஊரின் தலை வர்களின் தீர்மானத்தின்படி அவனை ஊர் முன்னிலையிலே தண்டித்து, அவனையும் அவன் குடும்பத்தையும் ஊருக்கு புறம்பே துரத்திவி ட்டார்கள். ஊரின் கடையான திசை யிலே அவனும் அவன் குடும்பமும் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார்கள். தசாப்தங்கள் சென்றும் அந்த ஊரிலு ள்ளவர்கள் யாரும் அவன் சந்ததியை அரோசித்தார்கள். பல தசாப்தங்களு க்கு முன் அந்த மனிதன் களவு எடுத் தது உண்மை ஆனால் அந்த ஊரில் கனம்பெற்ற கல்விமான்கள், மத அதி காரிகளின் கருத்தின்படி அவனுக்கும் அவன் சந்ததிக்கும் இனி வாழ் வில்லாதிருந்தது. இயேசு இந்த உலகிலே வாழ்ந்த நாட்களிலே, சமுதா யத்தில் கனம்பெற்ற அதிகாரிகள், கல்விமான்களால் புறக்கணிக்கப்பட்ட பல ஜனங்கள் வாழ்வடைய வழி தெரியாமல் வாழ்ந்து வந்தார்கள். தேவன் யார் என்பதை கற்றுக் கொடுக்கும்படி நியமிக்கப்பட்டிருந்த மதத் தலைவர்களும், இப்படிப்பட்ட ஜனங்களை பாவிகளும் அசுத்த முள்ளவர்களும் என்று தள்ளி வைத்திருந்தார்கள். வழி தெரியாமல் வாழ்ந்து வந்த அவர்களை தேடி இயேசு சென்றார். அவர்கள் தங்கள் பாவத்திலிருந்து மீட்படையும் வழியை அவர்களுக்கு காட்டினார். மத அதிகாரிகளோ, பாவம் செய்தவர்கள் நரகத்திற்கு நியமிக்கப்பட்டவர் கள் என்றிருந்தார்கள். ஆனால், இயேசுவோ, அவர்களில் ஒருவரும் தங்கள் பாவத்தில் அழிந்து நித்திய ஆக்கினை அடையாதபடிக்கு, அவ ர்களுக்குள மீட்படையும் வழியை காண்பித்தார். சற்று சிந்தித்துப் பாரு ங்கள். இன்று உங்கள் பிள்ளைகளில் ஒருவர் நெறி முiயான வாழ்க் கையை வாழ்ந்து வரலாம். ஆனால், சூழ்நிலைகள் காரணமாக அவர் கள் குற்றத்தில் அகப்பட்டுவிட்டால், அவர்கள் செய்த குற்றத்துடன் அவ ர்கள் வாழ்வு முடிவடையம்படி தள்ளிவிடுவீர்களா? அல்லது அவர்களு க்கு இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்று விரும்புவீர் களா? ஒரு வேளை நீங்கள் கைவிட்டாலும், எந்த ஒரு ஆத்துமாவும் பாவ த்தில் அழிந்து போகாமல் மனம்திரும்பி பரலோகம் வந்து சேரும்படிக்கு இயேசு அழைக்கின்றார். எனவே எந்த சூழ்நிலையிலும் மனந்திரும்பும் இருதயம் உள்ளவர்களாக இயேசு அண்டை கிட்டிச் சேருவோம்.

ஜெபம்:

மனதுருக்கமுள்ள தேவனே, ஒருவரும் கெட்டுப்போகமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்ற மனநிலை என்னில் வரும்படிக்கு என் மனக் கண்களை வெளிச்சமாக்கி நடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 9:36