புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 26, 2020)

பரிசுத்த அலங்காரம்

1 கொரிந்தியர் 3:17

தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்.


ஒரு ஆலயத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் ஒன்றிலே அதன் அங்க த்தவர்களில் சிலர், ஆலய கட்டிடத்தின் உள்ளும் புறமும் ஒழுங்காக பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தங்கள் கருத்தை தெரிவித் தார்கள். இந்த ஆலய கட்டிடம் எம் ஊரிலுள்ள பழம் பெரும் பாரம்பரிய சொத்துக்க ளில் ஒன்று எனவே இதை எங்களிடம் இருக்கும் நிதி நிலைமையின்படி எங்களால் முடிந்தவ ற்றை நிர்வாகித்து வருகின்றோம் என் று நிர்வாகிகள் பதில் கூறிய போதும், சிலரோ அந்தக் கூட்டத்திலே பெரும் சர் ச்சையை கிளப்பி, ஜனங்களை இரண் டாக பிரித்து விட்டார்கள். இவ்வண்ண மாக மனிதர்கள் ஆலய கட்டிடங்களை, அதன் சுற்றப்புறங்களைக் குறித்து மிகவும் கருத்துள்ளவர்களாக இருக் கின்றார்கள். பார்வைக்கு அழகானதும் நேர்த்தியானதுமாக அலங்காரங் களை உள்ளே வைத்திருப்பார்கள். அல ங்கோலமான எதையும் ஆலய வளாகத்தைவிட்டு அகற்றி விடுவார்கள். நாங்கள் கூடிவரும் ஆலய கட் டிடங்களை பேணிப் பாதுகாப்பதும், சுத்தமாகவும், அழகாகவும் வைத் திருப்பது நல்லது. ஆனால், நாங்களே ஜீவனுள்ள தேவன் தங்கும் ஆல யமாக இருக்கின்றோம். (1 கொரி 3:16). இந்த உலகத்திலுள்ள எல்லா கட்டிடங்களும் ஒரு நாள் அழிந்து போகும். அதைவிட நித்தியமாய் நிலைத்திருக்கும் எங்கள் ஆன்மாவைக் குறித்தே நாங்கள் அதிக கவன முள்ளவர்களாக இருக்க வேண் டும். மேலே கூற ப்பட்ட சம்பவத்திலே, ஆலய கட்டிடத்தை பேணிப் பாதுகாப்பதற்காக தங்களுக்குள்ளே தர்க்க ங்களையும், பிரிவினைகளையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். ஆலய கட்டிடத்திற்குள் நேர்த்தியானவைகளையும் அழகானவைகளையும் வை த்து அலங்கரிப்பது போல, ஜீவனுள்ள ஆலயமாகிய எங்கள் அகம் பரி சுத்தமாக பேணப்பட வேண்டும். தேவன் விரும்பும் பரிசுத்த அலங் காரம் எங்களுக்குள் காணப்படவேண்டும். அந்த பரிசுத்த அலங்கார த்திற்குள் பிரிவினைகள், சண்டைகளுக்கு இடமில்லை. பிரியமானவ ர்களே, இந்த ஆண்டின் கடைசி நாட்களுக்குள் வந்திருக்கின்றோம். எங் கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்பதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். தேவ வசனத்தின் வெளிச்சத்திலே உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் பரிசுத்த வாழ்வு வாழும்படிக்காய், இந்த பூமிக்கு வந்த இயேசுவின் அன்பை நினைத்துப் பாருங்கள். இருதயத்திற்குள் மறைந்திருக்கும் அசுத்தங்களை அகற்றிவிட்டு பரிசுத்த அலங்காரத் தோடு தேவனை தொழுது கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழ வேறு பிரித்த தேவனே, என் இருதயத்தில் இருக்கும் உமக்கு பிரியமில்லாத சுபாவங்களை விட்டுவிட்டு, பரிசுத்த அலங்காரத்தோடு உம்மை ஆராதிக்க என்னை வழிநடத்துவீராக. இரட் சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 96:9