தியானம் (மார்கழி 25, 2020)
பெரும் மகிழ்ச்சிக்குரிய நாள்
லூக்கா 2:14
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித் தார்கள்.
யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் ஊரிலே, மேய்ப்பர்கள் வயல்வெ ளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டி ருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிர காசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட் சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணி களில் சுற்றி, முன்னணையிலே கிடத் தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்க ளுக்கு அடையாளம் என்றான். அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்தி லிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமி யிலே சமாதானமும், மனுஷர் மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். ஆம் பிரியமானவர்களே, ஆண்டாண்டு காலமாக மனித குலம் எதிர்பார்த்திருந்த மீட்டாராகிய இயேசு, பரலோகத்திலே இருந்து தம்மைத் தாழ்த்தி, இந்த பூவுலகிற்கு வந்த நாளை இன்று நாங்கள் நினை வுகூருகின்றோம். உலகிலே இந்த நாளை மனிதர்கள் தங்கள் ஆசை இச்சைகளை நிறைவேற்றும் நாளாக மாற்றியுள்ளார்கள். பல இடங்களிலே குடித்து வெறித்து பலவிதமான களியாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள். வேறு சிலர் இந்த நாளை வியா பாரமயப்படுத்தியுள்ளார்கள். இயேசு என்ற பெயரை அந்த நாளிலிருந்து அகற்றிவிடுகின்றார்கள். மனித குலத்திற்கு மீட்பை உண்டாக்கும் வழி யை உண்டுப ண்ணும்படிக்கே இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். இயேசு இந்த பூமிக்கு வந்த நாள், பெரும் மகிழ்ச்சிக்குரிய நாள். எம் மீது அன்பு கூர்ந்து எங்கள் ஆத்துமாவை பாதாளத்திலிருந்து காத்துக் கொள்ளும் படிக்கு இயேசு வந்த திருநாள். எனவே, இந்த உலகத்தின் மாயைக்குள் சிக்கிவிடாதபடிக்கு, மீட்பராகிய இயேசு இந்த உலகத் திற்கு வந்த நோக்கம் எங்களில் நிறைவேறும்படிக்கு அவருக்கு பிரிய மானவைகளை செய்து, எங்கள் கிரியைகள் வழியாக தேவனை இன் னும் அதிகமாக மகிமைப்படுத்துவோம்.
ஜெபம்:
அன்பின் பிதாவே, நித்திய நரக ஆக்கினையிலிருந்து நான் தப்பி, நித்திய் வாழ்வை பெற்றுக் கொள்ளும்படிக்கு உம்முடைய திருக்குமார னாகிய இயேசுவை எனக்காக தந்ததிற்காக உமக்கு நன்றி. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ஏசாயா 9:6