புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 24, 2020)

நிபந்தனையற்ற அர்ப்பணிப்பு

யோவான் 6:38

என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.


வாக்களிக்கப்பட்ட மீட்பர் வெளிப்படுவார் என்று அநேக காலங்கலாக காத்திருந்து யூத மத அதிகாரிகள், மீட்பராகிய இயேசு வெளிப்பட்ட போது, தாங்கள் நினைத்தபடி மதச் சடங்குகளை செய்யாதபடியால் அவர்மேல் மூர்க்கமடைந்தார்கள். அவர்மேல் குற்றஞ்சாட்டலாமென்று எப்போதும் நோக்கமாயிருந்த மத அதிகாரிகள் அவரைக் கொலை செய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண் ணினார்கள். இயேசுவை கண்ட அசுத்த ஆவிகள் கூட இவர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டு நடுநடுக்கின. ஆனால் மதத் தலைவர்களோ, கண்ணி ருந்தும் அவரை காணா முடியாதவ ர்களாகவும், காது இருந்தும் அவரு டைய வார்த்தையை கேட்க முடியாதப டிக்கும் மெசியா (மீட்பர்) குறித்த அறிவிருந்தும் உணராதபடிக்கும் அவர்களுடைய இருதயம் கடின ப்பட்டிருந்தது. அவர்கள் மட்டுமல்ல, ஒரு சமயம் இயேசுவின் திருப்ப ணியை குறித்த அறிவு அவருடைய இனத்தவர்களுக்கும் இல்லாதி ருந்ததால், அவர்கள் மனக் கண்கள் குருடாக இருந்ததால், இயேசு மதிமயங்கியிருக்கின்றார் என்று தங்களுக்குள் தீர்மானம் பண்ணிக் கொண்டு அவரை பிடித்துக் கொண்டு கொண்டு செல்லும்படிக்கு வந்திருந்தார்கள். ஆனால் மீட்பராகிய இயேசு அல்ல, அவரின் இனத்த வர்களே இயேசுவை யார் என்று அறியாமல் மதிமயங்கியிருந்தார்கள். பிரியமானவர்களே, இயேசுவானவர், மனித சித்தத்தின்படியல்ல, தேவ சித்தத்தி ன்படி இந்த உலகிற்கு மனுவுரு எடுத்து வந்தார். மனிதர்களு டைய அங்கீகாரத்தையும் வீணான புகழ்சியையும் முகஸ்தியை அவர் பெற்றும் கொள்ளும்ப டிக்கு இந்த உலகத்திற்கு வரவில்லை. உலகின் ராஜாக்கள், மத அதிகாரிகள், இனத்தவர்கள், நண்பர்கள், கல்விமா ன்கள், ஐசுவரியவான்கள், நலன் விரும்பிகளை பிரியப்படுத்தி அவர் களுடைய சித்தத்தின்ப்படி வாழ்வதற்கல்ல, பிதாவாகிய தேவனுடைய சித்தம் செய்யும்படிக்கும், பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை செய் வதே ஒன்றே தேவையானது என்றும் எங்களுக்கு கற்றுக் கொடுக் கும்படிக்கும் வந்தார். எனவே எங்கள் விருப்பப்படி இயேசு எங்களிடம் வரவேண்டும், நாங்கள் விரும்பியத்தைக் கூறுவேண்டும் என்று எண்ணம் கொள்ளாமல், பிதாவாகிய தேவனுடைய அநாதி தீர்மானம் உங்களில் நிறைவேறும்படிக்கு இருதயத்தை இயேசுவிடம் கொடுங்கள்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே> உம்முடைய திருச்சித்தம் என் வாழ் வில் நிறைவேறத்தக்கதாக> நிபந்தனையின்றி என்னை முற்றிலும் உம் மிடம் ஒப்புக் கொடுகின்றேன். ஆட்கொண்டு நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 14:27