புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 23, 2020)

விசுவசிக்கின்றவனுக்கு நித்திய ஜீவன் உண்டு

யோவான் 6:47

என்னிடத்தில் விசுவாச மாயிருக்கிறவனுக்கு நித் தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாக வே உங்களுக்குச் சொல் லுகிறேன்.


இயேசுவும் அவருடைய சீ~ர்களும் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தா ளோ பற்பல வேலைகளைச் செய்வ தில் மிகவும் வருத்தமடைந்து, இயேசு வினிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோ தரி என்னை விட்டு வந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். இயேசு அவளு க்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகி றாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார். கர்த்தரை தன் வீட்டிலே ஏற்றுக் கொண்ட மார்த்தாள் இயேசு யார் என்பதையும் அவர் ஏன் தன் வீட்டிற்கு வந்தார் என்பதையும் குறித்து உண்மையை அறியாதவளாக இருந்ததால், அவள், “நான் தனியாக வேலை செய்வதைக் குறித்து உமக்கு கவலை இல்லையா” என்று கர்த்தரிடம் கேட்டாள். அழிந் துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலை நிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அந்த நிலை நிற்கின்ற போஜனத்தை நான் உங்களுக்கு தருவேன் என்று இயேசு கூறியிருக்கின்றார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதே அந்த நிலைநிற்கின்ற போஜனத்தை பெற்றுக் கொள்ளும் கிரியையா யிருக்கின்றது. ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக் காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்கா லும் தாகமடையான். நித்திய வாழ்வு தரும் ஜீவ வார்த்தையாகிய அந்த நிலைநிற்கின்ற போஜனத்தை கொடுப்பதற்காகவே இயேசு உங்களிடம் வருகின்றார். மார்த்தாளின் சகோதரியாகிய மரியாள் அதை அறிந்து கொண்டாள். அதுபோலவே நாங்களும் இயேசு எங்கள் வாழ்வில் வந்த நோக்கத்தை அறிந்தவர்களாக, அவருடைய வார்த்தையை கேட்டு, அந்த வார்த்தையின் வழியிலே நடந்து நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்வோம்.

ஜெபம்:

அநாதி தீர்மானத்தின்படி அழைத்தவரே, உம்முடைய அழைப்பின் நோக்கத்தை மறந்து இந்த உலக காரியங்களினால் கவலையடையாதபடிக்கு, உம் வார்த்தையின்படி வாழ கிருபை செய்வீராக. இட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 12:48