புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 22, 2020)

நான் உன் னை மறப்பதில்லை

ஏசாயா 49:15

ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.


ஒரு நாள் சாயங்காலத்தில், இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டிற்கு போவோம் வாருங்கள் என்று கூறினார். பாதி வழியிலே, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அவர்களின் படவின்மேல் மோதிற்று. இயேசு, கப்பலின் பின்னணியத்தில் தலையணையை வைத்து நித்திரை யாயிருந்தார். அவர்கள் அவரை எழு ப்பி: போதகரே, நாங்கள் மடிந்து போ கிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள். அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லா மற்போயிற்று என்றார். அவர்கள் மிக வும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்ப டிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். அவர்கள் இயேசுவை யார் என்று உண்மையாக அறியாததினால், உமக்குக் கவலையில்லையா என்று அவரிடம் கேட்டார்கள். அவர் காற்றையும் கடலையும் அதட்டி அடக்கிய போது இவர் யாரோ? என்று கூறிக் கொண்டார்கள். பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையில் இயேசு யார் என்று அறிந்திருக்கின்றீர்களா? “கடவுள் ஏன் இதை காணாமல் இருக்கின்றார்? ஏன் என் ஜெபத்தை கேட்காமலிருக்கின்றார்?” என்று மனிதர்கள் கூறுவதை நாங்கள் கேட்டிருக்கின்றோம். தம்மைத் தாமே எங்களுக்காக பலியாக ஒப்புக் கொடுத்தவர் எங்களை மறந்து போவாரோ? எங்களை குறித்து எண்ணமற்றவராக இருப்பாரோ? பிரியமானவர்களே, பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ? அவள் அப்படி மறந்து போனாலும் நான் உங்களை மறந்து போவதில்லை என்று எங்கள் கர்த்தர் கூறியிருக்கின்றார். எனவே, அவரை அறிகின்ற அறிவிலே வளருங்கள். வாழ்க்கைப் படவிலே புயல் மோதுவதைப் போன்ற சூழ்நிலைகள் ஏற்படும் போது, உங்கள் இருதயம் கலக்கமடைவதற்கு இடங் கொடாமல், நான் உன்னை மறப்பதில்லை என்று கூறிய இயேசு என்னோடு இருக்கின்றார் என்று உங்கள் இருதயத்திலே விசுவாசித்து வாயினாலே அறிக்கையிட்டு விசுவாசத்திலே நிலைத்திருங்கள்.

ஜெபம்:

பரலோக பிதாவே, நான் தாபரிக்கும் தேசமாகிய பரலோகத்தை வந்தடையும் வரைக்கும், இந்த உலகத்தில் உண்டாகும் கஷ்டங்களினால் சோர்ந்து பின்னடையாதபடிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:5