புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 21, 2020)

இருதயத்தை மாசுபடுத்துபவைகள்

எபேசியர் 4:31

சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷண மும், மற்ற எந்தத் துர்க் குணமும் உங்களைவி ட்டு நீங்கக்கடவது.


பட்டணம் ஒன்றிலே, வாரந்தோறும் குறிப்பிட்ட தினமொன்றிலே கழிப்வுப் பொருட்களை எடுத்துச் செல்லும்படிக்கு, நகரசபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதன்படிக்கு, ஒரு மனிதன், குறிப்பிட்ட தினத்திற்கு முந்தின இராத்திரியிலே, வீட்டிலிருந்த கழிப்பொருட்களை வெளியே வைத்தான். மறுநாளிலே, அயலிலுள்ளவர்களில் யாரோ ஒருவர் தங்கள் கழிவுப்பொருட்களை ஒழுங்காக வைக்காததால், சில கழிப்பொருட்கள் காற்றிற்கு அடிபட்டு இந்த மனிதனுடைய முற்றத்திலே இருப்பதை கண்டு கோபமடைந்தான். கழிவுப் பொருட்களை ஒழுங்காக பெட்டியிலிட்டு வைக்காகதது அயலில் வசிக்கின்றவர்களின் தவறு என்பது உண்மை. அதனால், தன் வீட்டு முற்ற த்தில் இருக்கும் கழிவுப் பொருட்களை அப்படியே விட்டுவிட்டால் யாருடைய வீட்டில் நாற்றம் எடுக்கும்? யாருடைய வீடு குப்பை நிறைந்ததாக இருக்கும்? பிரியமான சகோதர சகோதரிகளே, சுத்த இருதயத்தையும் நிலைவரமான ஆவியையும் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு கொடு த்திருக்கின்றார். உங்கள் உறவினரோ, நண்பர்களோ, உடன் சகோத ரர்களோ உங்களுக்கு எதிராக துரோகம் செய்துவிட்டால் என்ன செய் வீர்கள்? மாம்சத்தின் கிரியைகளாகிய வன்மம், பகை, கசப்பு தங்குவ தற்கு உங்கள் இருதயத்தில் இடங் கொடுப்பீர்களாக இருந்தால், யாரு டைய இருதயம் அசுத்தமாக இருக்கும்? யாருடைய இருதயத்திலிருந்து நாற்றம் உண்டாகும்? சிந்தித்து பாருங்கள். யாருடைய கழிப்வுப் பொரு ட்களாக இருந்தாலும், முதலாவதாக அவைகளை உங்கள் வீட்டை விட்டு அகற்றி, கழிவுப் பொருட்களுக்குரிய இடத்தில் போட்டுவிடுவது போல, உங்கள் சுத்த இருதயத்தை மாசுபடுத்தும் மாம்ச கிரியைகளை முதலாவதாக உங்கள் சுத்த இருதயத்தைவிட்டு அகற்றிவிடுங்கள். உங்கள் இருதயம் தேவன் தங்கும் ஆலயம் எனவே இந்த உலகத்தின் நீதி என்ற பெயரில் பிசாசானவன் உங்களை வஞ்சித்துப் போடாத படிக்கு விழிப்புள்ளவர்களாயிருங்கள். ஒவ்வொரு மனிதனும் தன் கிரியைக்குரிய பலனை அறுவடை செய்யும் நாள் வருகின்றது. அந்ந நாளிலே ஒவ்வொரு மனிதனும் எதை விதைத்தானோ அதையே அறு த்துக் கொள்வான். நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போ மாக. நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்வு வாழும்படி அழைத்தவரே, எந்த மனிதனுடைய கிரியைகளாலும் நான் என் இருதயத்தை மாசு படுத்தாதபடிக்கு தெளிந்த புத்தியை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 6:7-9