புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 20, 2020)

வளர்ந்து பெருகும்படிக்கு...

1 பேதுரு 2:3

நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தை களைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.


பாவத்திலிருந்த எமக்கு இரட்சிப்பானது எங்கள் கிரியைகளினாலே அல்ல, தேவ கிருபையினாலே உண்டானது. இது சத்திய வேதம் கூறும் உண்மை. அதாவது, நாங்கள் பெருந் தவம் இருப்பதினாலோ, எங்கள் உடலை வருத்தி கீறிக் கொள்வதாலோ, பெருத் தொகையான காணி க்கைகளினாலோ நாங்கள் இந்த இரட் சிப்பை பெற்றுக் கொள்ள முடியாது. இந்த விலைமதிக்க முடியாத இரட்சி ப்பினால், பரலோகம் செல்வதற்கு இருந்த தடை நீக்கப்பட்டது. பரலோக த்திற்கு செல்லும் வழியை இயேசு கிறிஸ்து உண்டு பண்ணினார். இன்று நீ கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினா ரென்று உன் இருதயத்திலே விசுவா சித்தால் இரட்சிக்கப்படுவாய் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. எனவே, இந்த இரட்சிப்பை பெற்றுக் கொள்வதற்காக மறுபடியும் எந் தவிதமான கிரியைகளை நாங்கள் செய்ய தேவையி ல்லை. ஆனால், இந்த இரட்சிப்பு இலவசமாய் உண்டானது எனவே நான் இனி பிரயா சப்பட தேவையில்லை என்று எங்கள் கண் போன போக்கில் வாழ முடி யாது. இந்த இரட்சிப்பை பெற்றுக் கொண்டவர்கள், இயேசு கிறிஸ்துவு க்குள் மறுபடியும் புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல ஒரு புதிய ஆரம்பத்தை பெற்றுக் கொள்கின்றார்கள். குழந்தையானது வளர்ந்து பூரண புரு~னாகும்வரைக்கும் (கிறிஸ்துவின் சாயல்), சகல துர்க்குண த்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளை யும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞான ப்பாலின்மேல் வாஞ்சையாயிருக்க வேண்டும். பரிசுத்த வேதாகமம் கூறும் திருவசனத்தின்படி தங்கள் பரிசுத்த வாழ்வை காத்துக் கொண்டு, நாளு க்கு நாள் தேவசாயலிலே வளர்ந்து வர வேண்டும். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. நீங் கள் செய்யவேண்டுமென்றிருக்கிற வைகளைச் செய்யாதபடிக்கு, இவை கள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. மாம்சத்தின் அந்தகார கிரி யைகளுக்கு உடன்படாமல், தேவ ஆவியின் துணையோடு அவைக ளைத் தள்ளிவிட்டு, பெற்றுக் கொண்ட இரட்சிப்பு உங்களில் நிறைவேறு ம்படிக்கு, தேவ வசனத்திலே நிலைத்திருங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கு என்னை வேறுபிரித்தீர். அதை உணர்ந்தவனா(ளா)ய், தூய ஆவியின் துணையோடு, திருவசனத்தின்படி வாழும்படி என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 6:27