புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 19, 2020)

சுய புத்தியின்மேல் சாயாதே

எபிரெயர் 2:4

இவ்வளவு பெரிதான இர ட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்


பட்டணத்திலுள்ள பிரபல்யமான விளையாட்டு அரங்கிற்குள் சென்று தேசிய ஓட்டப்போட்டிகளை நேரடியாகப் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருந்த வாலிபனிடம், அந்த அரங்கிற்குள் செல்வதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்வதற்கு அவனிடம் பணம் ஏதும் இருக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு பின், அவன் வேலைக்காக இணை ந்து கொண்ட கம்பனியினூடாக, அந்த ஆண்டுக்குரிய விளையாட்டுப் போட்டிக்குரிய அனு மதிச் சீட்டை இலவசமாக பெற்றுக் கொண்டான். “அனுமதிச் சீட் டை பத்திரமாக காத்துக் கொள், அதை விலை கொடுத்து வாங்குவதற்கு எங்களிடம் பணமுமில்லை என்று பெற் றோர் தம் மகனுக்கு அறிவுரை கூறி னார்கள். அப்போது அவன் “அதை தொலைத்து விடுவதற்கு நான் ஒரு கு ழந்தை பிள்ளையுமில்லை, எனது புறச் சட்டைபைக்குள் (Jacket pocket) மிகவும் கவனமாக வைத்திருக்கின்றேன்” என்று கூறினான். குறித்த நாளிலே, விளையாட்டு அரங்கிற்குள் செல்லும்படியாக, தன் நண்பனோடு, அவன் வரிசையில் நின்றான். அரங்கின் வாசலிலே நின்ற உத்தியோகஸ்தர்கள் அவனிடம் அனுமதிச் சீட்டை காட்டும்படி கூறிய போது, அவன் தன் கையை புறச்சட்டையின் பைக்குள் போட்டான். அங்கே அந்த அனுதிச்சீட்டை காணவில்லை. கலக்கமடைந்த வாலிபன், தான் அனுமதிச் சீட்டை பெற்றுக் கொண்ட விதத்தை அந்த உத்தியோகஸ் தருக்கு விளக்கமுயன்றான். அவரோ, நீ செல்லுபடியாகும் அனுமதிச் சீட்டை எமக்கு காட்டினாலொழிய உன்னை உள்ளே விட முடியாது என திட்டமாக கூறினார். அந்த வாலிபன் துக்கத்தோடு வீடு திரும்பினான். புpரியமான வர்களே, அந்த அனுமதிச் சீட்டு விலையுயர்ந்ததாயிரு ந்தாலும் அதற்கு ஒரு விலை உண்டு. இந்த வருட விiயாட்டுப் போட் டியை பார்க்க முடியாவிட்டால், ஒருவேளை அடுத்த வருடம் பார்க்க முடியம். ஆனால் விலைமதிக்கமுடியாததும், திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி, அந்தஸ்துகளால் பெற்றுக் கொள்ளமுடியாததுமான அரு மை யான இரட்சிப்பை நாங்கள் இயேசு கிறிஸ்து வழியாக இலவசமாக பெற்றுக் கொண்டோம். இந்த இரட்சிப்பை நாங்கள் தொலைத்து விட் டால், வேறு வழியேதும்மில்லை. எனவே இலவசமாய் பெற்றேன் என்று கவலயீனமாக இருக்க முடியாது. அதை காத்துக் கொள்ளும்படியாக நாங்கள் விழிப்புள்ளவர் களாக பிரயாசப்பட வேண்டும்.

ஜெபம்:

இரட்சிப்பின் தேவனே, விலைமதிக்க முடியாததை பணமுமின்றி விலையுமின்றி பெற்றுக் கொண்டேன் என்று அசட்டை செய்யாதபடிக்கு, இரட்சிப்பு நிறைவேறும்படி பிரயாசப்பட கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 2:8