புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 18, 2020)

பகலின் பிள்ளைகளாயிருக்கின்றீர்கள்

1 தெச 5:6

ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக் கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம்.


ஒரு தோட்டம் செய்த மனிதனொருவன் அருமையான நாற்றுக்களை நட்டான். ஆனால் தோட்டத்தை பராமரிக்கும் விடயத்தில் அவன் அச தியாக இருந்து வந்தான். தோட்டத்தின் வேலியில், ஒரு விரிசல் ஏற்ப ட்டத்தை கண்ட போது, அதை உடனடியாக சரிசெய்வதற்கு பதிலாக, அதை பிறகு பார்ப்போம் என விட்டுவிடுவான். குறித்த காலத்தில் நாற்றுக்களுக்கு நீர்பாய்ச்சுவதற்கு பதிலாக, ஒரு வேளை நாளை மழை பெய்யலாம், பெய்யாவிட்டால் மறுநா ளிலே பார்ப்போம் என்று கூறிக் கொள் வான். சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தை யும் கடந்துபோனேன். இதோ, அதெ ல்லாம் முள்ளுக்காடாயிருந்தது. நிலத் தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது. அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது. என்று சத்திய வேதம் கூறவது போல, பரலோக ராஜ்யத்தைக் குறித்து அச தியாய் வாழும் மனிதனுடைய வாழ்க்கையும் இருக்கின்றது. எங்கள் பரம பிதா நாங்கள் நடக்கும் வழியை எங்களுக்கு கற்றுக் கொடுக்கி ன்றார். அவ்வழியே நடப்பதற்கும், அவருடைய வார்த்தையின்படி வாழ்வை அமைத்துக் கொள்வதற்கும் நாங்கள் அசதியாக இருக்கக் கூடாது. சில மனிதர்கள் இந்த உலக த்தின் கல்வி, செல்வம், அந்த ஸ்து போன்றவற்றை அடைவதற்காக சற்றும் ஓயாது பிரயாசப்படுகி ன்றார்கள். அதன் பலனாக அவர்கள் இருதயம் விரும்பியதை பெற்றுக் கொள்கின்றார்கள். அவர்கள் அழிவுள்ளதை பெற்றுக் கொள்ளும்படி எவ்வளவாய் பிரயாசப்படுகின்றார்கள் என்று பாருங்கள். இந்த உலகத் திற்குரியவைகளை அடையும்படி கடல் கடந்து செல்லவும் ஆயத்தமாக இருக்கும் மனிதர்கள், தங்கள் ஆத்துமாவைக் குறித்த வி~யத்திலே, மேற்கூறிய சம்பவத்திலுள்ள, தோட்டம் செய்த மனிதனைப் போல கரி சனையற்றவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். இந்த உலகம் தரும் கல்வி செல்வம் அந்தஸ்து மனிதர்களுடைய வாழ்க்கையில் பெருகும் போது, தேவன் எங்களோடு இருக்கின்றார், அவர் எங்களை ஆசீர்வதித் திருக்கின்றார் என்று கூறி, ஆவிக்குரிய வாழ்விலே நிர்விசாரமான நிலையை அடைந்து, நித்திய வாழ்வைக் குறித்த காரியத்திலே அசதி யாய்ப் போய்விடுகின்றார்கள். நாங்களோ அவ்வண்ணமாய் தூங்கிவிடா தபடிக்கு, வெளிச்சத்தின் பிள்ளைகளைப் போல வழித்துக் கொண்டு தெளிந்தர்வளாகயிருக்கக்கடவோம்.

ஜெபம்:

நித்தியதிற்கென்று அழைத்த தேவனே, இந்த உலக ஆசீர்வாதங்க ளினாலே நிர்விசாரம் அடைந்து, நான் மதிமயங்கிப் போகாதபடிக்கு, பிர காசமுள்ள மனக் கண்களை தந்து என்னை வழிநடத்தி செல்வீராக.. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 24:30-34