புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 17, 2020)

வேற்றுமைகளை விட்டுவிலகுங்கள்

1 கொரிந்தியர் 1:30-31

எழுதியிருக்கிறபடி, மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன் மைபாராட்டத்தக்கதாக, அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரி சுத்தமும் மீட்புமானார்.


புதிதாக திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகளின் வாழ்க்கை யிலே, அவர்கள் இருவரும் சுபாவமாக பல காரியங்களிலே ஒருமைப் பட்டவர்களாக இருந்தார்கள். ஆனாலும், எல்லோருடைய வாழ்விலே இப்பது போலவே, அவர்களுடைய வாழ்விலும் சில வேற்றுமைகள் இரு க்கின்றதை இருவரும் அறிந்து கொண்டார்கள். ஒருவரை ஒருவர் அறி ந்து, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடு த்து தங்களுக்கிடையிலே இருக்கும் சில வேற்றுமைகளை விட்டுவிடுவதற்கு பதி லாக, “இப்படித் தான் என்னை என் அம்மா அப்பா வளர்த்தார்கள்” “இது எங்கள் குடும்ப பாரம்பரியம் நான் இப் படித்தான் இருப்பேன்” என்று தங்கள் வேற்றுமைகளிலே பெருமைபாராட்டி வந்தார்கள். இப்படியாக பல ஆண்டு கள் செல்லுகின்ற வேளையிலே. அவ ர்களுக்கிடையில் வேற்றுமையானது வ ளர்ந்து அவர்களின் வாழ்க்கையில் பெ ரும் பிளவை ஏற்படுத்தி விட்டது. அரு மையான சகோதர சகோதரிகளே, கிறிஸ்துவுக்குள் நாங்கள் புது சிருஷ் டிகளாக மாற்றப்பட்டிருக்கின்றோம். அதாவது, கிறிஸ்துவுக்குள் மறுப டியும் பிறந்திருக்கின்றோம். எங்களுடைய பழைய வாழ்க்கைக் குரிய மாம்ச இச்சைகளுக்குரிய சுபாவங்களை குறித்தும், இந்த உலகத்தி னால் உண்டான மேன்மைகளைக் குறித்து நாம் இனி மேன்மை பாராட்டாமல், தேவன் தந்திருக்கும் பெலத்தால், பழைய வாழ்க்கைக்குரிய சுபாவங்ளை நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்து க்குக் கீழ் ப்படுத்தி ஜெயம் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட தம்ப திகளைப் போல, நாங்கள் இப்படியாகத்தான் வாழ்ந்து வந்தோம், இவை எங்கள் கலாச்சாரத்திற்குரியவைகள், இவை எங்கள் பாரம்பரியம் என்று அவைகளை உங்களுக்குள் வளரவிடாதிருங்கள். கிறிஸ்து இயேசுவை அறிகின்ற அறிவின் மேன்மைக்காக இந்த பூமிக்குரியவைகளை விட்டு விடுங்கள். நாங்கள் எதைக் குறித்து மேன்மை பாராட்டுகின்றோமோ, அவை எங்கள் இருதயத்திலே சிறிய விதையாக விதை க்கப்பட்டு, பெரும் விருட்சமாக வளர்ந்து வரும். எனவே உலக மேன்மையை எங்க ளைவிட்டு அகற்றி, எங்களுக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்பு மாயிருக்கின்ற கர்த்தராகிய இயேசுவை குறித்தே தினமும் மேன்மை பாராட்டுங்கள்.

ஜெபம்:

புதிய வாழ்வை தந்த தேவனே, அழிவுள்ளவைகளை பற்றிக் கொண்டு, அவைகளை குறித்து மேன்மைபாராட்டாமல், பரலோக மேன்மைகளை பற்றிக் கொள்ளும்படி என்னை உணர்வுள்ளவனா( ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலி 1:7-8