புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 16, 2020)

இது ஒரு சிறிய காரியம்

கலாத்தியர் 5:9

புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.


ஒரு குடும்பத்தினர் அடுத்த ஊருக்கு செல்வதற்காக தங்கள் மோட்டார் வண்டியிலே ஏறிக் கொண்டார்கள். அவ்வேளையிலே, வீட்டின் மேல் மாடியிலுள்ள சிறிய ஜன்னல் ஒன்று திறந்திருப்பதை கண்ட மனைவி யானவள், நாங்கள் அதை பூட்டிவிட்டு செல்லுவோம் என்று கூறினாள். இப்படியாக எத்தனை தடவைகள் அந்த ஜன்னல் திறந்திருந்தது. யார் அந்த உ யரத்திற்கு ஏறப் போகின்றார்கள். நாம் மாலையிலே வீடு திரும்பி விடுவோம் என்று கூறிய கணவன் மோ ட்டார் வண்டியை ஓட்டிச் சென்றான். ஒரு சில மணித்தியாலங்களின் பின்பு, அந்த ஊரிலே திடீரென ஏற்பட்ட பெருங் காற்றோடு கூடிய பலத்த மழையினா ல், அந்த ஜன்னல் வழியாக அவர்கள் வீட்டிற்குள் பெருவாரியாக வெள் ளம் சென்றதால், அவர்கள் வீட்டிற்கு பெரிதான பாதிப்பு ஏற்பட்டது. மாலையிலே வீடு திரும்பிய குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்குள் சென்ற போது ஏக்கமடைந்தார்கள். இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாரு ங்கள்;. ஜன்னல் கதவு திறந்திருப்பது அந்த மனிதனுக்கு ஒரு அற்பமான காரியமாக இருந்தது. அது போலவே, இன்று தேவ அழைப்பை பெற்ற ஜனங்கள், தங்கள் வாழ்க்கையில், தேவனுடைய வார்த்தையை மீறி, பொல்லாங்கன் தங்கள் வாழ்க்கைக்குள் வந்து சேரும்படிக்கு சில ஓட்டைகளை அடைக்காமல் விட்டு வைக்கின்றார்கள். பெரும்பான்மை யானவர்கள் தங்கள் வாழ்க்கையிலே எல்லாம் நன்றாக இருக்கின்றது, இந்த வி~யம் ஒரு சின்னக் காரியம். அதை செய்வதால் என்ன தவறு? அல்லது இதைப் பார்த்தால் என்ன பிழை? வேதத்திலே எங்கே குறி ப்பிடப்பட்டிருக்கின்றது? என்று பல கேள்விகளை கேட்டுக் கொள் வா ர்கள். ஆனால், தங்கள் இருதயத்தை, தேவனுடைய வார்த்தையின்படி எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ளாமல், அறிந்தும் விட்டு வைக் கும் சிறிய வாசல் வழியாக தீமை உங்கள் வாழ்விலே நுழைந்து விடும். ஒரு துளி விஷத்தை நாம் குடிக்கும் தண்ணீர் தொட்டியில் இட்டால் என்ன? புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப் பப்பண்ணும். அது போல, தேவனுடைய வார்த்தைக்கு விரோதமாக, நீங்கள் அறிந்தும் திறந்து விட்டு வைத்திருக்கும் சிறிய காரியங்கள், ஈற்றிலே உங்கள் சமாதானத்தை முற்றாக குலைத்துப் போடும். என வே, பெற்றுக் கொண்ட தேவ சமாதனத்தை இழந்து போகாதபடிக்கு, உங்கள் இருதயத்தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

எல்லாம் அறிந்த தேவனே, சமாதானத்தைக் காத்துக் கொள்ளும்படி நீர் கொடுத்த வழி முறைகளைகளை துணிகரமாக தள்ளிவிடாதபடிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 4:23