புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 15, 2020)

யாருடைய குற்றம்?

சங்கீதம் 112:1

அல்லேலூயா, கர்த்தருக் குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


குறிப்பிட்ட தேசமொன்றிலே குடியேறிய மனிதனானவன், தன் இளமைக் காலத்தில், தேசத்தின் சட்டத்திற்கு விரோதமாக செய்த குற்றத்தினால் அவன் தனது குடியுரிமையை இழந்து போனான். எனினும் அந்த தேசத்திலே அவன் நிரந்திரமாக இருப்பதற்கு அதிகாரிகள் அவனுக்கு அனுமதி வழங்கியிருந்தார்கள். ஆனாலும் ஒரு குடியுரிமையுள்ளவ னுக்குரிய சலுகைகள் யாவும் அவனிட மிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனால் அவனுடைய பிள்ளைகளு க்கும், அவர்கள் சந்ததிக்கும் தேசத்தின் சட்டப்படி குடியுரிமையை பெற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த மனித னானவனுடைய பேரப்பிள்ளைகள், எங் கள் பட்டானார் செய்த குற்றத்தினால் எங்களுக்கு இந்த நிலைமை என்று கூறிக் கொள்வார்கள். சில ஆண்டுகளு க்கு பின், அந்த தேசத்தின் ராஜா, அந்த மனிதனைப் போல குடியுரி மையை இழந்தவர்களும், அவர்களு டைய சந்ததியினரும், மறுபடியும் இல வசமாக குடியுரிமையை பெற்றுக் கொள்ளும் வழியை ஏற்படுத்தினான். இப்போது, அந்த பாட்டனாரை குற்றம் சாட்டி வந்த அவன் பிள்ளைக ளும், பேரப்பிள்ளைகளும் குடியுரிமையை பெற்றுக் கொண்டார்கள். இனிமேல் அவர்கள் தங்கள் பாட்டனாரை குற்றப்படுத்த முடியாது. அவர்கள் பெற்ற குடியுரிமையை இப்போது அவர்கள் காத்துக் கொள்ள வேண்டும். பாட்டனார் அந்த தேசத்தின் குடியுரிமைச் சட்டத்தை மீறியதால் தன் குடியுரிமையை இழந்து போனார். அவன் சந்ததியினர் தாங்களும் அதே குற்றத்தை செய்யாதபடிக்கு தங்கள் வாழ்வை காத்துக் கொள்ள வேண்டும். பிரியமானவர்களே, இன்றும் மனிதர்கள் ஆதாம் செய்த குற்றத்தினால் நாங்கள் க~;டப்படுகின்றோம் என்று கூறிக் கொள்வார்கள். ஆனால், ஆதாம் தன் கீழ்படியா மையினால் இழந்து போன தேவ சாயலை பெற்றுக் கொள்ளும் வழியை நம் இயேசு ஏற்படுத்தியிருக்கின்றார். இனி ஆதாமின் குற்றம் என்று சொல்வதற்கு இடமில்லை. ஆதாம் செய்த பிரகாரம் நாங்களும் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படியாமல், வஞ்சிக்கும் சாத்தானுடைய சத்தத்திற்கு கீழ்படிந்தால், அது எங்களுடைய குற்றமாகும். எனவே தேவனுடைய சத்தத்தை இன்று கேட்டு அதன்படி வாழ்க்கையை மாற்றிக் கொள்ளுங்கள். செம்மையானவர்களின் வம்சம் பூமியிலே ஆசீர்வதிக்கப்படும்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள பிதாவே, ஆதாமின் கீழ்படியா மையினால் உண்டான சாபத்தை நீக்கி மறுவாழ்வு தந்தமைக்காக நன்றி. அதை நான் காத்துக் கொள்ளும்படி என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 3:6-16