புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 14, 2020)

உன்னத அன்பு

1 யோவான் 4:18

அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமா னது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.


நாங்கள் இன்று ஊருக்கு அப்புறத்திலே இருக்கின்ற வயலுக்கு விளை யாடும்படிக்கு போகின்றோம். நீங்கள் இருவரும் எங்களோடே வர வேண் டும் என்று இரு சகோதரர்களை அவர்களுடைய நண்பர்கள் அழைத் தார்கள். அதற்கு மூத்த சகோதரன் மறுமொழியாக: இல்லை, நான் வரமாட்டேன். நான் அங்கு சென்றால் என் அப்பா என்னை தண்டிப்பார் என்றான். அவனுடைய தகப்பனானவர் மிகவும் பெலசாலியாக இருந் ததால் மூத்தவனுக்கு தன் தகப்ப னைக் குறித்த பயமும் திகிலும் உள்ள த்திலிருந்தது. அதனால், தன் தகப்பன் சொல்லுவதை மீறி எதையும் செய்ய அவன் துணியவில்லை. ஆனால் இ ளைய குமாரன்: அவர் என்னை நேசி க்கின்ற தகப்பனானவர். அவர் என்னு டைய நலனைக் குறித்து கருத்துள்ள வராய் இருக்கின்றார். ஆதலால் நான் என் அப்பாவினுடைய சொல் லை மீறி அங்கு செல்ல மாட்டேன் என் அப்பா வின் சொல்லை எப்போதும் கனப்படுத்துகின்றேன் என்றான். இன்று பலர் மூத்த குமாரனைப் போல, தேவனைக் குறித்து திகிலும் நடுக்க மும் உடையவர்களாகவே இருக்கின்றார்கள். தேவன் எனக்கு அடித்துப் போடுவார் என்ற பயம் அவர்களை கலங்கப்பண்ணுவதால் மிகவும் பய முள்ளவர்களாய் மதச்சடங்குகளை அனுசரித்து வருகின்றார்கள். இப்ப டிப்பட்ட திகிலும் கலக்கமும், பரிசுத்த வேதாகமம் கூறும் தேவ பயம் அல்ல. நாங்கள் ஆராதிக்கின்ற தேவன் சர்வ வல்லமையுள் வராகவே இருக்கின்றார். ஒரு சொல்லாலே அவருக்கு எல்லாவற்றையும் அழித்துப் போட முடியும். அப்படியிருந்தும் தம்முடைய வல்லமையை எங்கள் மேல் காண்பிக்காமல், தம்முடைய உன்னத அன்பை எங்களை மேல் பொழி கின்றார். மேலே குறிப்பிடப்பட்ட இளைய குமாரனைப் போல, மனப்பூர் வமாக தம்மை நாம் நேசிக்கும்படிக்கும், அதனால் உண்டாகும் கனத் தையும் தேவபக்தியையுமே விரும்புகின்றார். பிரியமானவர்களே, தேவன் இருக்கின்றார் என்று பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. தேவ னைக் குறித்த எங்களுடைய விசுவாசமும் அதை சார்ந்த கிரியைகளும் தேவ அன்பினால் சாரமேற்றபட்டதாக இருக்க வேண்டும். தேவன் நம் மேல் வைத்திருக்கின்ற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவ னில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார்.

ஜெபம்:

அன்பில் பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கும்படி எங்களை தெரிந்து கொண்ட தேவனே, உம் அன்பின் ஆழத்தை இன்னும் அறிந்து உம்மைப் போல நாளுக்கு நாள் நான் மாற வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 5:5