புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 13, 2020)

உன் இருயத்தில் இருப்பது என்ன?

சங்கீதம் 37:8

கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு


ஒரு மனிதனானவன் தன் நண்பனோடு இணைந்து புதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பித்திருந்தான். வியாபாரத்தை ஆரம்பத்து சில மாதங்க ளுக்கு பின், தன் குடும்ப அலுவல்கள் காரணமாக தூர தேசம் ஒன்றி ற்கு அவன் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால், தன் நண்பனிடம் வியாபார பொறுப்புக்கள் யாவையும் கொடுத்து விட்டு இரண்டு மாதங்கள் சென்றிருந்தான். அவன் மறுபடி தன் ஊருக்கு திரும் பிய போது, அவனுடைய நண்பன், விசு வாச துரோகம் செய்து, வியாரபாரத்தி லிருந்து அநே கமாயிரம் டொலர்களை வஞ்சித்துக் கொண்டான். நண்பன் என் று கருதினேன், ஆனால் நீ துரோகி ஆகிவிட்டாய் என்று தன் நண்பனை தன் வாழ்விலிருந்து வில க்கி விட்டான். இரண்டு தசாப்த்தங்கள் கடந்தும், அந்த மனிதனால், தனக்கு நடந்த அநியாயத்தை மறந்து போக முடியவில்லை. ஒரு நாள் அவனு டைய பாட்டனார், அவனை நோக்கி: தம்பி, அநேக வருடங்களுக்கு முன் உன்னிடத்திலிருந்த உலக ஐசுவரியத்தில் ஒரு பகுதியை உன் பழைய நண்பன் திருடிக் கொண்டது உண்மை. அது இந்த உலகத்திற்குரியதும் அழிந்து போவதுமான ஐசுவரியம். ஆனால் நீ ஏன் உன் மனச் சாமாதானத்தையும் அவன் திருடிக் கொள்ள ஏன் இடங் கொடுத்தாய். இந்த உலக பொக்கி~மாகிய பணத்தை இழந்ததால், இயேசு கிறிஸ் துவால் நீ பெற்ற தேவசமாதானத்தை விற்றுவிடுவது சரியாகுமா? உன் பழைய நண்பன் மனந்திரும்பினால் அது அவனுக்கு நல்லது. அவன் மனந்திரும்பாவிட்டாலும் நீ இந்த உலகத்திற்குரிய மாம்ச இச்சையாகிய கசப்பை உன் உள்ளத்தில் வைத்திருக்காதே. அது உன்னை இந்த உலகத்தோடு இறுக பற்றி கொண்டிருக்கச் செய்யும். எங்கள் மீட்பரா கிய இயேசு இந்த உலகத்திலிருந்த நாட்களில் நன்மை செய்கின்ற வராகவே சுற்றித் திரிந்தார். பாவமறியாத நீதிபரராகிய அவரை சிலுவை யிலே அறைந்தார்கள். ஆனால், அவர் அந்த வேளையிலும், தன்னை துன்ப படுத்துகின்றவர்களுக்காக ஜெபம் செய்தார். பொல்லாதவர் களைக்குறித்து எரிச்சலடையாதே. நியாயக்கேடுசெய்கிற வர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. உன் வழியை கர்த்தருக்கு ஒப்புக் கொடு. நியா யத்திற்கும் நீதிக்கும் ஒரு நாள் உண்டு. அதை தேவன் பார்த்துக் கொள் வார். எனவே, இந்த உலகத்திற்குரியவைகளை உன் இருதயத்தை விட்டு அகற்று, பரலோகத்திற்குரியவைகளை அங்கே பொக்கி~மாக சேர்த்து வை என்று அறிவுரை கூறினார்.

ஜெபம்:

பரலோக பிதாவே, நீர் தங்கும் ஆலயமாகிய என் இருதயத்திலே வன்மம், எரிச்சல், பகை, பிரிவினை போன்ற மாம்ச இச்சைகள் குடி கொள்ள இடங் கொடுக்காதிருக்க எனக்கு உதவி செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:19