புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 12, 2020)

இயேசு அழைக்கின்றார்

சங்கீதம் 119:36

என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்.


இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவ ர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக் கொண் டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு: என் பின்னே வாருங்கள் என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின் சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவ ருக்குப் பின்சென்றான். இயேசு, பிலிப்பு என்பவனைக் கண்டு: நீ எனக்குப் பின் சென்று வா என்றார். இப்படியாக அவ ருடைய அழைப்பை பெற்ற பிரதான அப்போஸ்தலர்கள் தாங்கள் செய்வ தைவிட்டுவிட்டு உடடினயாக இயேசு வின் பின் சென்றார்கள். ஒரு சமயம், தன் சிறுவயதுமுதல் வேத பிரமா ணங்களை கைக் கொண்டு வந்த வாலிபன் ஒருவன் இயேசுவினிடத் திலே வந்தான். இயேசு அவனை நோக்கி: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரரு க்குக் கொடு, அப்பொழுது பரலோகத்தில் உனக்குப் பொக்கி~ம் உண் டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்ட பொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். வேத பிரமாணங் களை தன் சிறு வயதிலிருந்து செய்து வந்தபோதும், வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டா க்கிய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தருடைய அழைப்பின் மேன்மையை ஏற்றுக் கொள்ள முடியா தபடிக்கு, பொருளாசை அவன் இருதயத்தை ஆட்கொண்டு, மனக்கண்களை குருடுபடுத்தியிருந்தது. இன்று உங்கள் வாழ்வை சற்று ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். இந்த பூமிக்குரியவைகள் ஒன்றும் உங்கள் இருதயங்களை ஆட்கொள்ள விடாதிருங்கள். அவை பொருளாக இருக்கலாம் அல்லது உலகிலே நன்மை என்று கூறப்படும் அதன் களியாட்டங்களாக இருக்கலாம். அவைகளாலே உங்கள் மனக்கண்களை இருளடையச் செய்துவிடாதிரு ங்கள். ஏனெனில் அவைகள் வரவிருக்கும் நித்தியத்திற்குரிய மேன்மை யானவைகளை பற்றிய உணர்வை உங்கள் இருதயத்திலிருந்து அற்று ப்போகப் பண்ணிவிடும்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, அழியாததும் வாடாததுமான ராஜ்யத்திற் குரியவைகளை, அழிந்து போகும் இந்த உலக பொருட்களுக்காக இழந்து போகாதபடிக்கு உலக ஆசைகளை சாராமல் இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - கொலோசேயர் 3:1