புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 11, 2020)

ஆன்மீக மீட்பு

யோவான் 6:68

ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே.


ஒரு மனிதனானவன் வருடாந்த மருத்துவ சோதனைக்காக தனது குடும்ப வைத்தியரை சந்திக்கும்படி சென்றிருந்தான். வைத்தியர், பல மருத்துவ சோதனைகளை செய்து, பின்பு, ஒரு சில நாட்களுக்கு பின் அவனை மறுபடியும் அழைத்தார். அந்த மனிதனின் சரீரத்திலுள்ள நோய் அறி குறிகளை எடுத்துக்கூறி, அந்தக் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யும்படிக்கு, அந்த மனிதனானவன் செய்ய வேண்டிய உடற்பயிற் சிகளையும், உட்கொள்ள வேண்டிய மரு ந்துகளையும், அவன் தனது வாழ்க்கை யிலே ஏற்படுத்த வேண்டிய மாற்றங்க ளையும் குறித்து அவனுக்கு விளக்கிக் கூறினார். ஆனால் வைத்தியர் தன் நிலையைப் பற்றி கூறியதைக் குறித்து அந்த மனிதனானவனுக்கு திருப்தியுமி ல்லை. வைத்தியர் கூறியவற்றை கை க்கொள்ளுவதற்கு மனதுமில்லை. அவன் அப்படி தன் நிலையை ஏற்றுக் கொள்ள மறுப்பதினால் யாருக்கு ந~;டம் உண்டாகும்? சற்று சிந்தித்துப் பாருங்கள். பிரியமான சகோதர சகோதரிகளே, உங்கள் ஆன்மீக நோய்களின் அறிகுறிகளைக் குறித்து தேவனுடைய வார்த்தைகள் கூறும் அறிவுரைகளை அற்பாக எண்ணா திருங்கள். ஒரு வேளை, இந்த பூவுலகிலே, ஒரு வைத்தியரை விட்டு இன்னுமொரு வைத்தியரிடம் செல்லலாம். ஆனால் ஆன்மீக விடுத லையை பெற்றுக் கொள்ளும்படிக்கு, இயேசுவை விட்டு யாரிடம் செல் ல முடியும்? இன்று மனிதர்கள், தங்கள் வாழ்க்கை முறைக்கும், மன விருப்பத்திற்கும் ஏற்றப டியாக வாழும்படிக்கு தங்களுக்கு ஏற்ற மதச்; சடங்காச்சாரங்களை பின் பற்றுகின்றார்கள். மனித யோசனைகளின் படி காலத்திற்கு காலம் வாழ்க்கை முறைமைகளை மாற்றியமைக்கின்றா ர்கள். இவைகளினாலே ஒரு மனிதனுக்கு ஆன்மீக விடுதலை உண் டாகுவதில்லை. உங்கள் வாழ்வின் உண்மை நிலையை வகையறுத்துக் கூறும் இயேசுவிடம் உங்களது இருதயத்தை ஒப்புக் கொடுங்கள். தேவ னுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபு றமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமா வையும் ஆவியையும், கணுக்க ளையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைக ளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. பிரியமானவர்களே, பரம வைத்தியராகிய இயேசுவை அண்டிச் சேருங்கள். அவர் வழியாக ஆன்மீக விடுதலையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

மேன்மையான அழைப்பைத் தந்த தேவனே, இந்த உலகிலே வாழும் நாட்களிலே, நீர் தந்த பெலத்தின்படி, நான் மற்றவர்களுக்கு ஆறுதல் அளிப்பவனா(ளா)க வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 14:6