புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 10, 2020)

சமாதானத்தை காத்துக் கொள்ளுங்கள்

சங்கீதம் 119:92

உமது வேதம் என் மனம கிழ்ச்சியாயிராதிருந்தால் என் துக்கத்திலே அழிந்து போயிருப்பேன்.


ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்கள் இரு வருக்கும் தகப்பனுடைய வீட்டிலே பிள்ளைகளுக்குரிய உரிமைகள் இருந்தது. தகப்பன் வீட்டிலுள்ள பொதுவான ஆசீர்வாதங்கள் யாவற் றையும் அவர்கள் அனுபவித்து வந்தார்கள். வருங்காலங்களிலே, சமாதா னமாக வாழ்வதற்குரிய வழிமுறைகளை தகப்பனானவர், தன் இரண்டு குமாரர்களுக்கும் சொல்லிக் கொடுத்தார். நீங்கள் சேர்ந்து பழகும் நண்பர்களைக் குறித்து எச்சரிக்கை யாய் இருங்கள், துன்மார்க்கமான வழி களிலே வாழும் நண்பர்களின் கூட்டு றவு உங்களை நாளடைவிலே படுகுழி க்குள் தள்ளிவிடும் என்று கூறியிருந் தார். ஆனால், மூத்தவன் தன் தகப்ப னானவரின் சொல்லை தன் மனதிலே பதித்து வைத்து, அதன்படி தன் வாழ் வை காத்துக் கொண்டான். இளையவ னோ, தன் தகப்பனானவரின் புத்திமதியை அசட்டை செய்து தீய பழ க்கங்களுள்ள நண்பர்களுடன் போக்கும் வரத்துமாக இருந்து வந்தான். ஆண்டுகள் கடந்து சென்றதும். இரண்டு குமாரர்களும் தாங்கள் விதை த்ததை அறுத்துக் கொண்டார்கள். மூத்தவன், தன் வாழ்வின் வழியை காத்துக் கொண்டதால் சமாதானத்தை பெற்றுக் கொண்டான். இளைய வனோ தன் வாழ்வின் வழியை காத்துக் கொள்ளாததால் படுகுழியில் விழுந்துவிட்டான். பிரியமானவர்களே, பரம பிதா மனிதர்களை பிழை ப்பூட்டுகின்றார். அவர் மிருகஜீவன்களுக்கும் காக்கைக் குஞ்சுகளுக்கும் கூட ஆகாரங்கொடுக்கிறார். எல்லோரும் இரட்சிப்படையும்படிக்கு தமது கிருபையை யாவர்மேலும் பொழிகின்றார். அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கும், வாழ்வின் சமாதானத்தைக காத்துக் கொள்ளும்படிக்கும் வழிமுறையை சொல்லியிருக்கின்றார். ஆனால் மனிதர்களோ, மேலே குறிப்பிடப்பட்ட இளைய குமாரனைப் போல, தகப்பன் வீட்டிலுள்ள பொதுவான ஆசீர் வாதங்ளை பெற்றுக் கொண்டு, வாழ்வு தரும் திருவசனங்களை விட் டுவிட்டு, தேவ கிருபையை தகாதவிதமாக பயன்படுத்துகின் றார்கள். பிரியமானவர்களே, சமாதானமான வாழ்க்கையைக் காத்துக் கொள்ளு ம்படிக்கு, இயேசுவின் திருவார்த்தைகளின்படி உங்கள் வாழ்வை காத் துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

நித்திய வாழ்வு தரும் தேவனே, இந்த உலகத்தின் ஆசைகளில் இழுப்புண்டு அவைகளை நிறைவேற்றும்படிக்கு உம் திருவார்த்தைகளை தள்ளிப்போடாமல், திரு வார்த்தையின்படி என்னைக் காத்துக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 128:1-6