புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 09, 2020)

ஏழைகளின் பெலன் எளியர்களின் திடன்

ஏசாயா 25:4

நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவ னுக்குத் திடனும், பெரு வெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலு க்கு ஒதுங்கும் நிழலுமா னீர்.


ஒரு ஊரில் இயங்கி வந்த சமூக கழகம் ஒன்றிலே அங்கத்தவராக இணைந்து கொள்வதற்கு சில நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டிருந் தது. அந்த நிபந்தனையின் அடிப்படையிலே, அங்கத்தவராகுமொருவர் வருடாந்தம் ஒரு முன்குறிப்பிடப்பட்ட சந்தா பணத்தை செலுத்த வேண் டியிருந்தது. அந்தத் தொகையானது, ஏழை எளியவர்களுக்கும், சதாரண குடிமக்களுடைய பொருளாதார நிலைக்கும் அப்பாற்பட்டதாயுமிருந்த தால், அந்த ஊரிலே வசதியாக வாழ் கின்றவர்கள் மட்டுமே இணைந்து கொ ள்ள முடிந்தது. இவ் வண்ணமாகவே, இந்த உலகிலே பல ஒன்றியங்களும், கழகங்களும் செயற்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல் மதம் சார்ந்த சில அமைப்புக்களிலும்கூட மறைமுகமாக, சமூக அந்தஸ்து, கல்வி, ஐசுவரியம் போன்ற காரணிகளை மையமாக வை த்து தரப்படுத்துதல் இடம் பெறுவதை ஊடகங்கள் வாயிலாக நாங்கள் அறி ந்து கொள்கின்றோம். உலகிலுள்ள அமைப்புகளும், ஒன்றியங்களும் இந்த உலகின் கல்வி, குடும்ப அந்தஸ்து, ஐசுவரியம் போன்றவற்றினால் கவர்ந்து கொள்ள ப்படலாம். ஆனால், சர்வ வல்லமையுள்ள தேவனை இவைகளினாலே கவர்ந்து கொள்ள முடியாது. தாழ்மையுள்ள இருயத்தையுடையவர்களை தேவன் விரும்புகின்றார். கொடூரமானவர் களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக் கையில், தேவனாகிய கர்த்தர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமாயிருக்கின்றார். பிரியமான சகோதர சகோதரிகளே, தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசு வரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரி ந்துகொண்டிருக்கின்றார். நீங்கள் இந்த உலக மாயைக்குள் சிக்கி கொள்ளாதபடிக்கு, தேவனுடைய ஆளுகையை அறியும் அறிவிலே வள ர்ந்து பெருகுங்கள். மனு~னுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பா யிருக் கிறது. வெளியின் பு~;பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று. தேவனின் ஆளுகைக்குட்பட்ட வன் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பான்

ஜெபம்:

மகிமையின் தேவனே, இந்த உலகத்தின் மாயைக்குள் சிக்கி, இந்த உலக ஆஸ்திகளிலே கண்களை வைக்காதபடிக்கு, தாழ்மையுள்ள இருதயத்தோடு உம்மை சேவிக்க என்னை உணர்வுள்ளவனா(ளா) க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 2:1-8