புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 08, 2020)

நீ கைவிடப்படுவதில்லை

மாற்கு 5:34

மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுக மாயிரு என்றார்.


என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் இயேசுவை மிகவும் வேண்டிக்கொண்டான். அவர் அவனோடேகூடப் போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின் சென்று அவரை நெருக்கினார்கள். அப்பொழுது பன்னிரண்டு வரு~ மாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டான வைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது, இயேசுவை க்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவ ருடைய வஸ்திரங்களையாகிலும் தொ ட்டால் சொஸ்தமாவேன் என்று சொ ல்லி, ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக் குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். உடனே அவ ளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று. அந்த வேதனை நீங்கி தான் ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறி ந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். திரளான ஜனங்கள் இயேசுவை நெருக்கிக் கொ ண்டிருந்தபோதும், அந்த ஸ்திரியை அவர் பாராமுகமாக விட்டுவிடவி ல்லை. அவள் யார் என்று அறிந்து அவளை நோக்கி: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார். பிரியமானவர்களே, எத்தனை கோடி ஜனங்கள் இந்த உலகிலே இருந்தாலும், எங்கள் மீட்பராகிய இயேசு எங்கள் ஒவ்வொருவரையும் தனிப்பட அறிய விரும்புகின்றார். ஒரு வேளை இந்த உலகத்திலுள்ளவர்கள் தகுதி அடைப்படையில் பல ரை புறக்கணிக்கலாம். இனி விடுதலை இல்லை என்று கைவிட்டு விட லாம். ஆனால் அன்புள்ள தெய்வமாகிய இயேசுவின் ஆளுகையில், ஆகா தவன் அல்லது ஆகாதவள் என்று எவரையுமே அவர் தள்ளிவிடுபவர் அல்லர். இன்று உங்கள் இருதயத்திலுள்ளதை உண்மை மனதுடனும், விசுவாசத்துடனும் இயேசுவினிடத்தில் அறிக்கையிடுங்கள். அவர் உங்களை ஆதரித்து, மன ஆறுதலைத் தந்து வழிநடத்திச் செல்வார். தேவ சமாதானம் உங்கள் இருதயங்களை ஆளக்கடவது.

ஜெபம்:

எங்களை நேசிக்கின்ற தேவனே, நீர் ஒருவரே என் நிலையை அறிந்தவர். என் இருதயத்தின் வேண்டுதல்களை உம்மிடம் தெரியப் படுத்துகின்றேன், நீர் என்னை ஆட்கொண்டு நடத்தியருளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபாகமம் 31:6