புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 07, 2020)

பெரிதான சிலாக்கியம்

மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சும க்கிறவர்களே! நீங்கள் எல் லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்க ளுக்கு இளைப்பாறுதல் தருவேன்.


வனாந்திர வழியிலே காடும், மலையும், பள்ளத்தாக்குகளும் இரு ப்பதைப் போல இந்த உலகிலே மனிதனுடைய வாழ்வில் அவன் பல சவால்களையும், நெருக்கங்களையும், துன்பங்களையும் எதிர்நோ க்குகின்றான். முற்பகல் விதைப்பதை பிற்பகல் அறுப்பதைப் போல சில துன்பங்கள் மனிதர்களுடைய வாழ்க்கையின் தெரிவுகளால் உண்டா கின்றது. வேறு சில நோவுகள், எங்களை சூழ உள்ளவர்களின் தெரிவுகளினாலே உண்டாகின்றது. இன்னும் சில எங்கள் அறிவிற்கு அப்பாற்பட்ட நோவுகளாக இருந்து வருகின்றது. இவைகள் மத்தியிலே சில மனிதர்கள் அகப்பட்டு வெளியே வர முடியாதபடிக்கு தவிக்கின்றார் கள். தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டி ருக்கும் இடுக்கண்ணிலிருந்து விடுத லையாகி, இளைப்பாறுதலை கண்ட டையும்படி தங்கள் சரீரங்களை வரு த்துவதற்கும் ஆயத்தமாக இருக்கின் றார்கள். பல ஆயிரக்கணக்கான டொ லர்களானது விரயமாய் போனாலும், கடல் கடந்து யாத்திரை செய்ய நேர் ந்தாலும், என் வாழ்வில் விடுதலை உண்டாக வேண்டும் என்று தீர்மானம் செய்து கொள்கின்றார்கள். ஆனால் எங்களை நேசிக்கின்ற தெய்வம் இயேசு எங்கள் பாவங்களைக் போக்கும்படி பரலோகத்திலிருந்து இறங்கி வந்து: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று அன்புடன் அழை க்கின்றார். தம்மிடத்தில் சேருகின்றவர்களுக்கு, பணமுமின்றி விலையு மின்றி மன ஆறுதலை கொடுக்கின்றார். உங்கள் வாழ்க்கையிலே, மலை போன்று நிற்கும் பிரச்சனைகளை, பனிபோல உருகிடச் செய்திடு வார். அவருடைய ஆளுகை நித்தியமானது, அந்த ஆளுகையில் இந்த உலகத்தால் கொடுக்க முடியாத நித்திய சமாதானம் உண்டு. இதோ, உங்கள் இதய வாசற்படியிலே நின்று கதவை தட்டுகின்றார். நீங்கள் உங்கள் இருதயத்திலே அவருக்கு இடங் கொடுப்பீர்களாக இருந்தால், அவர் வந்து உங்களோடு வாசம் செய்வார். பிரியமான சகோதர சகோத ரிகளே, உங்கள் மனதின் பாரங்களை கர்த்தர்மேல் வைத்துவிடுங்கள். உங்கள் கவலைகளை அவரிடத்தில் உண்மை மனதோடு தெரியப்படு த்துங்கள். அவர் உங்களை ஆதரித்து வழிநடத்திச் செல்வார்.

ஜெபம்:

விடுதலை தரும் அன்பின் தேவனே, என் மனப் புண்களை நீர் காண்கின்றீர். உம்முடைய சமாதானம் என்னையும் என் வீட்டையும் ஆட் கொண்டு நடத்தும்படி என்னை உம் பாதத்தில் ஒப்புக்கொடுக்கின்றேன். இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:1-10