புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 06, 2020)

நான் தேவ பக்தியுள்ளவனா?

1 சாமுவேல் 16:7

மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்.


ஒரு சமயம், தேவனாகிய கர்த்தரால் தமது பணிக்கென தெரிந்து கொள் ளப்பட்ட சாமுவேல் என்னும் தீர்க்கதரிசி, தேசத்தை ஆளும்படி உண்மை யும் உத்தமமுமான வேறொரு ராஜாவை அபிஷேகம் செய்யும்படி ஈசா ய் என்னும் மனிதனுடைய வீட்டிற்கு சென்றிருந்தார். ஈசாய்க்கு எட்டு குமா ரர்கள் இருந்தார்கள். சாமுவேல் ஈசாயின் மூத்த குமாரன் அபினதாப்பை ப் பார்த்தபோது, இவன்தான் தேவன் தெரிந்து கொண்ட அடுத்த ராஜா என்று எண்ணிக் கொண்டான். கர்த்தர் சாமு வேலை நோக்கி: நீ இவனுடைய முக த்தையும், இவனுடைய சரீரவளர்ச்சி யையும் பார்க்கவேண்டாம்; நான் இவ னைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார் க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முக த்தைப் பார்ப்பான்;. கர்த்தராகிய நா னோவென்றால் இருதயத்தைப் பார்க்கிறவர் என்றார். பிரியமானவர் களே, இந்த உலகிலே மனிதர்கள், மற்றய மனிதர்களின் வெளி தோற் றத்தையும், அவர்கள் காண்பிக்கும் நடக்கைகளையும் வைத்து அவர்க ளைக் குறித்த காரியத்தை தீர்மானம் செய்து கொள்கின்றார்கள். ஒரு வன் மதச்சடங்காச்சார அடிப்படையிலே, ஆலயத்திற்கு சென்று வருகி ன்றான். அவனை பார்க்கும் ஜனங்கள் இவன் பக்தியுள்ளவன் என்று கூறிக் கொள்வார்கள். ஆனால் அவன் இருதயத்தில் பொருளாசை, மோக பாவ இச்சைகள், கோபம், வன்மம், பகை, வைராக் கியம், கச ப்பு, பிரிவினை போன்றவை குடியிருக்கலாம். தேவ பக்தியு ள்ள மனித னுடைய இருதயத்திலே இவைகளுக்கு இடமில்லை. ஏனெனில் இவை கள் மாசம்சத்தின் இச்சைகள். தேவ பக்தியுள்ளவன், தேவனுடைய பரி சுத்த ஆவியினாலே நடத்தப்படுவதால், மாம்ச இச்சைகள் தன் இருதய த்திலே குடிகொள்ள இடங் கொடுக்க மாட்டான். எங்கள் பிதாவாகிய தேவனுடைய ஆளுகையில் அவர் மனிதனுடைய இருயத்தையும் அவ னுடைய சிந்தையையும் ஆராய்ந்தறிகின்றார். இது தேவனுடைய ஆளு கை. எனவே நாங்கள் தேவ னுடைய ஆளுகைக் குட்பட்டிருக்கும்படிக்கு மேற்கூறிய மாம்சத்தின் இச்சைகளை எங்கள் இருதயத்திலிருந்து அகற்றிவிட்டு, தெய்வீக சுபாவங்களிலே வளர வேண்டும். உங்கள் வாழ்க்கையை குறி த்து மற்றய மனிதர்கள் நற்சாட்சி கூறுவது நல்லது. அதனால் திரு ப்தியடைந்துவிடாமல், வேத வார்த்தையின்படி, வேதனை உண்டாக்கும் வழிகள் உங்கள் இருதயத்தில் குடிகொண்டிருக்கின்றதோ என ஆராய்ந்து பார்த்து, அவைகளை விட்டுவிட வேண்டும்.

ஜெபம்:

அன்பின் தேவனே, என் இருதயத்தையும் என் சிந்தனைகளையும் ஆராய்ந்து அறிகின்றவரே, வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும். இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:8