புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 05, 2020)

பிதவாகிய தேவனை அறிந்து கொள்ளுங்கள்

சங்கீதம் 103:8

கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.


தன் தகப்பனானவரின் ஆளுகையை குறித்து அறியாதிருந்த, இளைய மகன்; தன் ஆஸ்தியில் தனக்கு வரும் பங்கை எடுத்துக் கொண்டு, தூர தேசத்திற்கு சென்று, அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். அவன் உணர்வடைந்து தன் தகப்பன் வீட்டிற்கு திரும்பினான். அதனால் தகப்பனானவர் பெரும் விருந்தை ஏற்படுத்தினார். வீட்டில் பெரும் மகிழ் ச்சி உண்டானது. தன் தகப்பனானவரின் வயலிலே வேலையை முடித்து மாலை யிலே வீடு திரும்பிய மூத்தகுமாரன், தகப்பனின் ஆஸ்திகளை அழித்து வீடு திரும்பிய தன் தம்பியைக் குறித்து அவன் தன் மனதிலே கோபமடைந்து, தன் தம்பியின் மனந்திரும்புதலை கொண்டாடும்படி தகப்பனானவர் ஏற்படுத்திய விருந்தில் பங்கு பற்ற மனதில்லாமல், வீட்டிற்கு வெளிய நின்று கொண்டிருந்தான். தகப்பனா னவர், வெளியே வந்து, தன் மூத்த குமாரனை உள்ளே வரும்படி வருந்தியழைத்தார். அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட் டியையாவது கொடுக்கவில்லை. வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ் தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான். அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ள தெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியா யிருக்க வேண்டுமே என்றார். ஆம் பிரியமானவர்களே, இளைய குமா ரன் மாத்திரமல்ல, தன் தகப்பனோடு பல ஆண்டுகளாக இருந்து அவரு க்கு ஊழியம் செய்து வந்த மூத்த குமாரனும் தன் தகப்பனானவரின் ஆளுகையைக் குறித்து உணராதவனாயிருந்தான். எங்கள் பிதாவாகிய தேவனுடைய வீட்டிலே உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகு ந்த கிருபையுமுண்டு. அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக் குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். எனவே குறைகளிலே தரித்து நிற்காமல், எங்கள் பரம தந்தையைப் போல இரக்கமுள்ளவர்களாயிருங்கள்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, உம்முடைய ஆளுகையை அறிகின்ற அறிவிலே நாள்தோறும் வளர்ந்து, தெய்வீக சுபாவங்கள் என் வாழ்வில் பெருகும்படிக்காய் என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 19:10