புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 04, 2020)

உங்கள் வாழ்வின் எஜமானன் யார்?

மத்தேயு 6:24

தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது


இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது. ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்;. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் எதற்கு முதலிடம் கொடுக்கின்றானோ, எதை நாடித் தேடுகின்றானோ, அந்தக் காரியமே அவன் வாழ்க்கையை கட்டுப்படுத் தும் காரணியாக இருக்கும். உலக பொருட்களை விரும்புகின்றவர்கள் இரவு பகலாக அதை நாடித் தேடு வதையும், அதை எப்படியாக பெருக் கிக் கொள்ளலாம் என்பதைக் குறித்தும் எப்போதும் எண்ணமுள்ளவர்களாக இருப்பார்கள். உலக பொருள் அவர் கள் வாழ்க்கையைக் கட்டுப் படுத்தும் எஜமானனாக மாறிவிடுகின்றது. இவர் கள் தாங்கள் சமயப் பற்றுள்ளவர்கள் என்று கூறினாலும், இவர் களுடைய ஜெபமும் உலக பொருட்களை குறித்ததாகவே அமைந்தி ருக்கும். இவர்கள் இருதயம் பிதாவாகிய தேவனுடைய ஆளுகைக்கு உட்பட்டதல்ல. இப்படிப்பட்டவர்கள், நாளடைவிலே பல சோதனை யிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுந்து விடுகின்றா ர்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங் களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். பிதாவாகிய தேவனுடைய ஆளுகைக்கு உட்பட்டவர்கள் நாங்கள் காண்கின்ற இந்த உலகத்தை நாடித் தேடுகின்றவர்கள் அல்லர். அவர்கள் மனிதர்களுடைய மாம்ச கண்களால் காணமுடியாத பரலோகத்தை, தங்கள் விசுவாசக் கண்க ளால் கண்டு உணர்ந்தவர்களாக, பரலோகத்தையே நாடித் தேடுகின் றார்கள். தேவனாகிய கர்த்தரே இவர்களுடைய வாழ்வின் எஜமானனாக இருக்கின்றார். உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதி ருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சை யும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவை கள். உலகமும் அதின் ஆசை இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். எனவே தேவனுடைய ராஜ்யத்தையும் அதன் நீதியையும் உங்கள் வாழ்விலே முதலிடமாக்கிக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, இந்த உலகத்தின் வேஷம் களைந்து போகும் என்பதை எப்போதும் உணர்ந்தவனா(ளா)ய், நித்திய ஆசீர்வாதத் தின் ஊற்றாகிய உம்மைப் பற்றிக் கொள்ள கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:6:-11