புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 03, 2020)

உன்னதமானவரின் ஆளுகை

சங்கீதம் 91:1

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்


உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் தங்கள் இருதயங்களை ஆளுகை செய்ய இடங் கொடுப்பவர்களின் புத்தி மங்கிப் போவதால், அவர்கள் பிதாவாகிய தேவனுடைய ஆளுகையைவிட்டு தூரம் போய்விடுகின்றார்கள். இதனால் தங்கள் வாழ்விலே பல நோவுகளை உண்டாக்கிக் கொள்கின்றார்கள். இவ்வண்ணமாகவே, ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர் களில் இளையவன் தகப்பனை நோக் கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர் களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டு க்கொடுத்தான். சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர் த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புற ப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ் தியை அழித்துப்போட்டான். எல்லாவற்றையும் அவன் செலவழித்த பின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, பன்றிகள் தின்கிற தவிட் டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன் மனக் கண்கள் பிரகாசமடைந்தது. தகப்பன் வீட்டில் இருப்பதன் மேன்மையை யும் அவருடைய ஆளுகையையும் குறித்து உணர்ந்து கொண்டான். தான் செய்த குற்றத்தை உணர்ந்தவனாய் தன்னைத் தாழ்த்தி, தகப்பன் வீட்டிற்கு சென்றான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத் தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். தன் பாவங்களை அவ ரிடம் அறிக்கையிட்டான். தன்னை அவருடைய ஊழியர்களில் ஒருவ னாக ஏற்றுக் கொள்ளும்படி கூறினான். ஆனால், தகப்பனானவரோ, அவனை மறுபடியும் தன் பிள்ளையாய் ஏற்றுக் கொண்டார். தன் குமாரனுடைய மனந்திரும்புதலை கொண்டாடினார். பிரியமானவர்களே, இந்த உலக கவலையினால், சர்வ வல்;லமையுள்ள தேவனுடைய ஆளு கையை விட்டு விலகி சென்றுவிடாதிருங்கள். உன்னதமானவரின் மறைவில் தங்கயிருப்பதையே தெரிந்து கொள்ளுங்கள். அவரே எங்கள் அடைக்கலமும், கோட்டையும், ஆபத்துக் காலத்திலே அனுகூலமான துணையுமாயிருக்கின்றார். அவருடைய ஆளுகையின் கீழ் நித்திய இளைப்பாறுதல் உண்டு.

ஜெபம்:

பிதாவாகிய தேவனே, இந்த உலகத்தின் மாயைக்குள் சிக்கி அழிந்து போகாமல், உம்முடைய ஆளுகையின் மேன்மையை உணர்ந்து அதற்குள் கீழ்பட்டிருக்க பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 23:6