புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 02, 2020)

தேவனுடைய ஆளுகை

சங்கீதம் 32:8

நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்.


பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தரு டையது. கர்த்தர் சர்வ வல்லமையுள்ளவராக இருந்தும் தம்முடைய வல்லமையினால் மனிதர்களை ஆளுகை செய்யாமல், சுயாதீனத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கின்றார். அதாவது, ஆசீர்வாதத்தையும், சாபத் தையும், நித்திய ஜீவனையும், நித்திய மரணத்தையும் மனிதர்களுக்கு முன் பாக வைத்து, மனிதர்கள் அவரவரு டைய சுய தீர்மானத்தின்படி தங்கள் தெரிவுகளை எடுக்கும்படி சுயாதீன த்தை அவர்களுக்கு கொடுத்திருக்கி ன்றார். ஆதி பெற்றோராகிய ஆதாம் ஏவாள் தங்கள் சுய தீர்மானத்தின்படி, தேவனுடைய வார்த்தைக்கு கீழ் ப்படியாமல், வலுசர்ப்பமாகிய பிசாசானவ னுடைய வார்த்தையின்படி கிரியையை நடப்பித்ததால், சாபத்திற்கும் நித்திய மரணத்திற்கும் தங் களையும் தங்களுக்கு பின்வந்த மனித குலத்தையும் உட்படுத்தினார்கள். தேவனாகிய கர்த்தருடைய ஆளுகையிலே சாபத்திற்கும், நித்திய மரணத்திற்கும் இடமில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் ஆசீர்வாத த்தையும் நித்திய ஜீவனையும் தெரிந்து கொள்ளும்படிக்கு தேவன் ஆலோசனை கூறுகின்றார். ஆசீர்வாதமும், நித்திய ஜீவனும் தேவனு டைய ஆளுகைக்கு உட்பட்டிருக்கின்றது. எனவே நாங்கள் நன்மையை கண்டடையும்படி தேவனுடைய ஆளுகைக்குள் உட்பட்டிருக்க வேண் டும். அந்த ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் வழிமுறையை பரிசுத்த வேதா கமம் எங்களுக்கு போதிக்கின்றது. நாங்கள் நடக்க வேண்டிய பாதை யை எங்களுக்கு காண்பிக்கின்றது. சத்திய வேதத்திலுள்ள ஜீவ வார்த் தைகள் எங்கள் கால்களுக்கு தீபமும் எங்கள் பாதைக்கு வெளிச்சமு மாயிருக்கின்றது. அதன்படி நடக்கின்றவர்கள் இடறி விழுவதில்லை. தேவன் விளம்பிய வேத வார்த்தைகளை கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவன் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட் டின புத்தியுள்ள மனு~னுக்கு ஒப்பாக இருக்கின்றான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடிப்பது போல பல சவால்கள் அவன் வாழ்க்கையில் வந்தாலும், அவன் அசைக்கப்படுவ தில்லை. பிரியமான சகோதர சகோதரிகளே, அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், தேவன் விளம்பின வேதமே எங்களுக்கு நலமானது. நிலையான பொக்கி~த்தை தரும் வேதத்தை சார்ந்து வாழுங்கள். அங்கே தேவனுடைய ஆளுகையை கண்டடைவீர்கள்.

ஜெபம்:

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானனாகிய கர்த்தாவே, நீர் விளம்பிய வேதம் நிறைவானது. அந்ந நிறைவான வார்த்தைகளை தியானித்து அதன் வழியிலே நடக்க உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 112:1-3