புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 01, 2020)

அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்

எபிரெயர் 10:23

அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மை யுள்ளவராயிருக்கிறாரே.


உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவனிடத்தில் விசுவாசமா யிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட் டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆய த்தம் பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இரு க்கிற இடத்திலே நீங்களும் இருக்கு ம்படி, நான் மறுபடியும் வந்து உங் களை என்னிடத்தில் சேர்த்துக்கொள் ளுவேன் என்று எங்கள் மீட்பராகிய இயேசு கிறிஸ்து வாக்குரைத்திருக்கி ன்றார். மனித குலம் இந்த உலகத்தின் மாயையிலே மாண்டு போகாதபடிக்கு, நித்திய வாழ்வை பெற்று, பிதாவா கிய தேவனுடைய வீட்டில் என்றென் றுமாய் சுகித்திருக்கும்படிக்கு, இயேசு கிறிஸ்துவானர் தாமே, தம்மைத் தாழ் த்தி மனித உருவெடுத்து,இந்த உல கி ற்கு வந்த நாளை நாங்கள் இந்த மாதத்திலே நினைவு கூருகின்றோம். இது பிதாவாகிய தேவனுடைய அநாதி திட்டம். பட்சபாதம் இல்லாமல் “எல்லோருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவரு க்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார்.” ஆதலால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட் சிக்கப்படுவான். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படு வதில்லையென்று வேதம் சொல்லுகிறது. பிரியமானவர்களே, இந்த உலகத்தில் மனிதனுடைய வாழ்க்கை கடந்து போகின்றது. மனு~னு டைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது. வெளியின் பு~;பத்தைப் போல் பூக்கிறான். காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற் போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றெ ன்றைக்கும் உள்ளது. அவருடைய அநாதி திட்டத்தில் பங்கடையும் படிக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து காட்டிய வழியிலே வாழுங்கள். இந்த உலகத்தினால் உண்டாகும் உபத்திரவங்களை குறித்து கலக்க மடையாதிருங்கள். தேவனுடைய வாக்குத்தத்தத்தை உறுதியாய் பற்றிக் கொண்டு முன்னேறுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, நீர் வார்த்தையில் உண்மையுள்ளவர். உல கத்தினால் உண்டாகும் உபத்திரவங்களினால் நான் தளர்ந்து போகாதபடி க்கு உமது வார்த்தையில் உறுதியாய் நிலைத்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 10:11