புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 28, 2020)

தேவன் எங்களோடிருப்பதை வாஞ்சிப்போம்

சங்கீதம் 42:2

என் ஆத்துமா தேவன் மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது.


பல ஆண்டுகளாக, பல சிரமங்கள் மத்தியிலே, ஒரு காரியாலயத்திலே வேலை பார்த்து வந்த தகப்பனானவருக்கு, அவர் வசிக்கும் ஊரிலி ருந்து சற்று தொலைவிலுள்ள குறித்த காரியாலயத்தின் தலைமைய கத்திலே பதவியுயர்வுடன் நல்லதொரு வேலை கிடைத்தது. ஆனால், தினமும் அங்கு சென்று வரமுடியாது. எனவே அவர் தன் குடும்பத்தை தன் ஊரிலே விட்டுவிட்டு, காரியாலய த்தின் தலைமையகம் அமைந்துள்ள பட் டணத்தில், காரியாலயத்தினால் கொடு க்கப்படும் வதிவிடத்திலே வசிக்க வேண்டும். மூன்று அல்லது ஆறுமா தங்களுக்கு ஒரு முறை, விடுமுறை நாட்களில் தன் ஊருக்கு திரும்ப முடி யும். தாராளமான சம்பள உயர்வுடன், மிகையூதியம் (Bonus) மற்றும் பல சலுகைகளுடனான இந்த பதவியுயர்வு அவருக்கு கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பம். அந்த வேலைக்கு சம்மதம் தெரிவிக்கும் முன்னைய இரவன்று, அவருடைய மகளானவள் தன் தகப்பனானவரை நோக்கி: அப்பா, நாங்கள் குடும்பமாக சில கஷ்டங்களை அனுபவித்தாலும், நீங்கள் எங்களுடனே இருப்பதையே விரும்புகின்றேன். புதிய வேலையில் கிடைக்கும் சலு கைகள் எனக்கு வேண்டாம் நீங்கள் தினமும் எங்களோடு இருப்பதே எனக்கு வேண்டும் என்று கூறினாள். தன் மகள் தன்மேல் வைத்திருக் கும் அன்பை நினைக்கையில், தகப்பனானவரின் உள்ளத்தில் சொல்ல முடியாத மகிழ்ச்சி பெருகிற்று. எந்த தயக்கமும் இன்றி தான் செய்து வந்த வேலையையே தொடர்ந்து செய்வதற்கு தகப்பனானவர் முடி வெடுத்தார். பிரியமானவர்களே, எங்கள் பரம தந்தையும் எப்போதும் எங்க ளோடு உறவாடவே விரும்புகின்றார். எங்கள் மத்தியிலே வாசம் செய்ய விரும்புகின்றார். ஆனால், பொருட்களை வேண்டும்படி கடை க்கு செல்வது போல நாங்கள் அவரிடம் செல்லக் கூடாது. அவரிடம் நன்மைகள் உண்டு. நாங்கள் நித்திய வாழ்வை பெற்று சதா காலமும் தம்முடைய பரம வீட்டிலே நீடூழியாய் வாழ வேண்டும் என்பதையே அவர் விரும்புகின்றார். எனவே, நாமும் அந்த மகளைப் போல, பொரு ட்களல்ல, நீர் எங்களோடு இருப்பதையே வாஞ்சிக்கின்றோம் என்று மனதார அவரிடம் கூற வேண்டும். மானானது நீரோடைகளை வாஞ் சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது என்று சங்கீதக் காரன் வாஞ்சித்தது போல தேவனானவர் எங்களோடு இருப்பதையே நாம் வாஞ்சிக்க வேண்டும்.

ஜெபம்:

அன்புள்ள பிதாவே, இந்த உலகப் பொருட்களுக்காக உம்மை நாடித் தேடாமல், உம்மை உண்மையாக நேசித்து, உம்மை நாடித் தேட உணர்வுள்ள இருதயத்தைத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 84:2