புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 26, 2020)

கர்த்தருடைய நாள்

சங்கீதம் 122:1

கர்த்தருடைய ஆலயத்திற் குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.


அடுத்த ஊரிலே வசிக்கும் தன் வயதான பெற்றோரின் திருமண ஆண் டுநிறைவின் நாளில் அவர்களை சந்திப்பதற்காக வருவேன் என்று அவர்களுடைய மகன் கூறியிருந்தான். நாட்கள் நெருங்கிய போதோ, அவன் தன் குடும்;பத்தில் எதிர்பாராத சில சவால்களை எதிர்நோக்கியிரு ந்தான். வேலைப் பழுவும் மிகவும் அதிகமாக இருந்தது. எனவே பெற்றோரை சந்திக்க செல்வது சாத் தியப்படாது என்பதை அவன் எதிர் நோக்கும் சூழ்நிலையை அவனுடைய பெற்றோருக்கு, அவன் மனைவி தொ லைபேசி வழியாக தெரியப்படுத்தி யிருந்தாள். அது உண்மையாக இருந் தபோதிலும், மகனானவனோ, தன் பெற்றோரை அவன் அதிகமாக நேசித் ததால், தன் காரியங்களை ஒழுங்கு படுத்தி, குறித்த நாளிலே பெற்றோரிடம் சென்றான். குறிப்பிட்ட அந்த நாளிலே தங்களது மகனைக் கண்ட பெற்றோர் பேரானந்தம் அடைந் தார்கள். இன்றைய நாட்களிலே, சில மனிதர்கள், “எல்லா நாட்களுமே கர்த்தருடையது எல்லாவற்றையும் நான் அவருக்கு கொடுத்துவிட்டேன்” என்று சொல்லுவதை நாங்கள் கேட்டிருக்கின்றோம். பூமியும் அதன் நிறைவும் அதன் குடிகளும் கர்த்தருடையது. எல்லா நாட்களுமே கர்த் தருடையது என்பது உண்மை. அதனால், கர்த்தர் நியமித்த தம்முடைய நாளை எங்களுக்கு இ~;டமானதை நாம் செய்து விட்டு, எங்களுடைய வசதியின்படி இன்னுமொரு நாளை கர்த்தருடைய நாள் என்று நாங்கள் நியமிக்க முடியாது. வனாந்தரத்திலே என்னுடைய ஓய்வுநாட்களை தீட்டுப்படுத்திய உங்கள் பிதாக்களைப் போல, நீங்கள் நடவாமல், என் ஓய்வு நாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களு க்கும் அடையாளமாயிருக்கும் என்று தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு கூறினார். அதற் கமைய கர்த்தரை ஆராதிக்க நாம் கூடும் கர்த்தருடைய நாளை சகல கனத்தோடும் பரிசுத்ததத்தோடும் அனுசரிக்க வேண்டும். அந்நாளிலே இந்த உலகத்திற்குரியவைகளை தேடும்படி க்கு, அழிந்து போகின்றவைகளை மேன்மைப்படுத்தி, கர்த்தருடைய நா ளை நாங்கள் அற்பமாக எண்ணிக்கொள்ளக் கூடாது. இவ்வண்ணமாக செய்து வந்த தேவ ஜனங்கள், தாபரிக்கும் ஊருக்கு போகும் வழியி லே தங்களை அழித்துக் கொண்டார்கள். எனவே கர்த்தருடைய நாளை நாம் அசட்டை பண்ணாமல், மனவிருப்பத்தோடு அனுசரிக்க வேண்டும்.

ஜெபம்:

என் தேவனாகிய கர்த்தாவே, கர்த்தருயை நாளை பரிசுத்தத் தோடும், பயபக்தியோடும், மனதார அனுசரிக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபி க்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப் 20:7