புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 24, 2020)

கர்த்தருடைய வேதம்

சங்கீதம் 19:7

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தரு டைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியா க்குகிறதுமாயிருக்கிறது.


எகிப்தின் பாவ அடிமைத் தனத்திலே அகப்பட்டிருந்த தம்முடைய ஜனங்களை தேவனாகிய கர்த்தர்தாமே தம்முடைய ஓங்கிய புயத்தி னாலும் பலத்த கரத்தினாலும் விடுதலையாக்கி, பாலும் தேனும் ஓடுகிறதும் எல்லா தேசங்களின் சிங்காரமுமான தேசத்திலே அவர்க ளைக் வழிநடத்தி வந்தார். 1. அவர்கள் எகிப்தில் இருக்கும் போது அவரவர் தங்கள் கண்களால் எகிப்தின் அருவருப்புகளைக் நோக்கி, நரகலான விக்கிரகங்களால் தங்களைத் தீட்டுப்ப டுத்தியிருந்தார்கள். 2. அவர்கள் சென் றடையும் கானான் தேசத்து ஜனங்க ளின் அக்கிரமங்கள் மிகையாக இருந் தது. எனவே, தேவனாகிய கர்த்தர் தாமே, தம்முடைய ஜனங்கள் விட்டு வந்த எகிப்தின் நரகலான விக்கிரகங்க ளினால் தங்களை மறுபடியும் தீட்டுப்ப டுத்தாதபடிக்கும், அவர்கள் சென்றடை யவிருக்கும் கானான் தேசத்தின் குடி களின் பொல்லாத வழிகளினால் தங்க ளை கெடுத்துக் கொள்ளாதபடிக்கும், தம்முடைய வேதத்தை அவர்க ளுக்கு கொடுத்தார். அவற்றுள் பிரதானமாக தம்முடைய ஓய்வுநாளை அவர்களுக்கு கட்டளையாக கொடுத்தார். ஆனாலும் அவர்களுடைய இருதயம் அவர்களுடைய நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றினது மல்லாமல், அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைக ளில் நடவாமற்போய், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக் குலைச்சலாக் கினார்கள். எங்களுடைய வாழ்க்கையிலும், நாங்கள் விட்டு வந்த பழைய மனுஷனுக்குரிய அடிமைத்தனத்திற்குரிய கிரியைகளுக்கு நாங் கள் திரும்பாதபடிக்கும், தேவனை சந்திக்கும் நாள்வரைக்கும் எதிர் நோக்கவிருக்கும் பிசாசின் தந்திரங்களை ஜெயங்கொள்ளத் தக்கதாக வும், தம்முடைய நியமங்களை எங்களுக்கு கொடுத்திருக்கின்றார். நாங் கள் எங்கள் பழைய மனு~க்குரிய மாம்சமான கிரியைகளினால் எங் களை தீட்டுப் படுத்தாமலும், எங்கள் வாழ்க்கையில் எதிர்நோக்கும் வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடுமுள்ள போராட்டங்களிலும் ஜெயங் கொள்ளும்படியாகவும் தேவனாகிய கர் த்தர் கொடுத்திருக்கும் சத்திய வேதத்தை பற்றிக் கொள்வோமாக. அவை களால் நாம் எச்சரிப்பை பெறுகின்றோம். அவைகளைக் கைக்கொள் ளுகிறவர்களுக்கு மிகுந்த பலன் உண்டு.

ஜெபம்:

நீதியின் தேவனே, வேதத்திலுள்ள அதிசயங்களின் மேன்மை களை அறிந்து, அவைகளை பற்றிக் கொண்டு, அதன்படி வாழும்படிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:7-9