புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 22, 2020)

மனநிறைவுள்ள வாழ்வு

சங்கீதம் 139:7

உம்முடைய ஆவிக்கு மறை வாக எங்கே போவேன்? உம் முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?


யோனா என்னும் மனிதன் தேவனாலே அழைப்பைப் பெற்ற தீர்க் கதரிசியாக இருந்தான். கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். அப்பொழுது யோனா கர்த்தருடைய வார்த் தையை கேட்டும் அவருடைய சமு கத்தினின்று விலகி, ஓடும்படி வே றொரு பட்டணத்திற்கு செல்லும் ஒரு கப்பலில் ஏறிக் கொண்டான். யோனா தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பிலிருந்து விலகி ஓடிய தால் அவனுக்கும் கப்பலிலே அவ னை சூழ இருந்த பயணிகளுக்கும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அவன் தேவனுடைய ஊழியனாக இருந்தும், அவனுடைய மனதிலே சமாதானம் குலைந்து போய் விட்டது. பிதாவாகிய தேவன் தாமே, நாம் தம்முடைய குமாரர்களும் குமாரத்திகளாகும்படிக்கு உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார். அவருடைய அழைப்பை பெற்ற நாம், அந்த அழைப்பை நிறைவேற்றாமல், அதைவிட்டு விலகி ஓடுவோமாக இருந்தால் எங்கள் வாழ்விலும் எங்களை சூழ இருக்கின்ற வர்களுடைய வாழ்விலும் பெரும் குழப்பங்களை ஏற்படுத்துவோம். இன்று தேவ அழைப்பை பெற்ற மனிதர்கள், வாழ்விலே ஏற்படும் சில உபத்திரவங்களை கண்டு “எனக்கு ஏன் இந்த வேலை, நான் வருவேன், என் விருப்பத்தின்படி ஜெபிப்பேன், பின்பு போய்விடுவேன்” என்று கூறிக் கொள்கின்றார்கள். அதனாலே பிரச்சனைகள் இல்லாமல் ஒதுங்கி வாழலாம் என்று எண்ணிக் கொள்கின்றார்கள். அதனால், சில பிரச்சனை களை தவிர்த்துக் கொள்கின்றார்கள். ஆனால், தேவன் அழைத்த அழை ப்பை நிறைவேற்றாமல் தன் விருப்பத்தின்படியே வாழும் மனிதனுடைய வாழ்விலே மனச் சமாதானம் நிலைத்திருக்காது. கிறிஸ்வதவர்கள் என்ற பெயரை தரித்த நாம், கிறிஸ்துவை தரித்தவர்களாக வாழும் போது மனதிலே பூரண சமாதானம் தங்கும். பிரியமானவர்களே, இந்த உலக த்திலே எங்களுக்கு உபத்திரவங்கள் உண்டு, அதனிமித்தம் சோர்ந்து போகாதிருங்கள். தீமை செய்து பாடுகளை அனுபவிப்பதைவிட நன்மை செய்து அநீதியை சகித்துக் கொள்வேதே மேலானது. எனவே சூழ்நிலை களை கண்டு பின்வாங்கி போகாமல், பிதாவாகிய தேவனுடைய அழை ப்பை நிறைவேற்றுவோம் அதற்குரிய பலனை தேவன் தந்தருள்வார்.

ஜெபம்:

சமாதானத்தின் தேவனே, என் வாழ்விலே உம்முடைய அழைப்பை நிறைவேற்றுதன் மேன்மையை உணர்ந்து கொள்ளும்படிக்கு மனப்பிரகாசமுள்ள கண்களை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:14-15