புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 21, 2020)

ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொள்

1 தீமோத்தேயு 6:20

ஓ தீமோத்தேயுவே, உன் னிடத்தில் ஒப்புவிக்கப்ப ட்டதை நீ காத்துக்கொ ண்டு,


ஒரு முக்கியமான பரீட்சையொன்றிற்கு ஆயத்தப்பட்டுக் கொண்டிருக் கும் மாணவர்களில் பலர் ஆசிரியரின் அறிவுரையைக் கேட்டும் அதன் படி பாடங்களை கற்க மனதில்லாதவர்களாக இருந்தார்கள். அதனால் அந்த ஆசிரியர் தன்னுடைய கடமைகளை செய்வதில் தவறிவிடவி ல்லை. பரீட்சை முடிவுகள் வந்த போது அந்த ஆசிரியரின் அறிவுரை யை கேட்டு அதன்படி பாடங்களை கற் றவர்களுக்கும், ஆசிரியரின் அறிவுரை யை கேட்க மனதில்லாமல் அற்பமாக எடுத்துக் கொண்டவர்களுக்குமுரிய வித் தியாசம் யாவருக்கும் தெரிய வந்தது. இப்படிப்பட்ட அனுபவம் அந்த ஆசி ரியருக்கு ஒவ்வொரு வருடமும் ஏற்ப டுவதுண்டு. ஆனால் ஆசிரியர் தன் தொழிலை செய்வதில் தளர்ந்து போக வில்லை. இதற்கொத்ததாகவே, தேவனுடைய பிரமாணங்களும் மனி தர்களுக்கு போதிக்கப்படுகின்றது. அதன்படி சிலர் தங்கள் வாழ்வைக் காத்துக் கொள்கின்றார்கள். வேறுசிலரோ கேட்டும் கேளாதவர்கள் போல தேவனுடைய பிரமாணங்களை அற்பமாக எண்ணுகின்றார்கள். சிலர் தேவனுடைய பிரமாணங்களை அற்பமாக எண்ணுவதால் நாங்கள் தேவனுடைய பிரமாணங்களை இனி எடுத்து கூறமாட்டோம் என்று கூற முடியுமா? இல்லை. அதற்கென்று நியமிக்கப்பட்ட நாங்கள் வாழ்வு தரும் தேவ பிரமாணங்களை கூறுவதில் தளர்ந்து போய்விட முடியாது. விதைப்பவன் ஒருவன் விதைக்கச் சென்ற போது, அவன் விதைக் கையில், சில விதை வழியருகே விழுந்தது. பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங் களில் விழுந்தது. மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளை த்தது. வெயில் ஏறினபோதோ, தீய்ந்துபோய், வேரில்லாமையால் உலர் ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது. முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. சில நிலங்கள் பலனற்றது போல, சிலருடைய இருதயங்களும் பலனற்ற நிலையிலிருப்பதால், உங்களுக்கு கொடுக்க ப்பட்ட பொறுப்பிலிருந்து சோர்ந்து போய் விடாதிருங்கள். சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி, சோர்ந்து போகாதபடி வல்ல கிரியையை நடப்பியுங்கள். கர்த்தர் பெரிதான பலனை தந்தருள்வார்.

ஜெபம்:

அவனவனுடைய கிரியைகளுக்கு தக்க பலனை கொடுக்கும் தேவனே, நீர் எனக்கு ஒப்புவித்த பொறுப்பிலிருந்து சோர்ந்து போகமாமல் இருக்க பெலன் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 2:6-7