புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 20, 2020)

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன்

எசேக்கியேல் 18:27

துன்மார்க்கன் தான் செய் த துன்மார்க்கத்தை விட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானே யாகில், அவன் தன் ஆத்து மாவைப் பிழைக்கப்பண் ணுவான்.


குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் இயேசுவோடேகூட கொலை செய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரை யும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். அன்றியும் சிலுவையில் அறையப்ப ட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்க ளையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். மற்றவன் அவ னை நோக்கி: நீ இந்த ஆக்கினை க்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக் குப் பயப்படுகிறதில்லையா? நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகி றோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகா ததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும் போது அடியேனை நினைத்தருளும் என்றான். இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய் யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த குற்றவாளிகள் நியாயப்படி அவர்களு டைய துன்மார்க்கமான வழிகளுக்கு தக்க தண்டனையை பெற்றுக் கொ ண்டிருந்தார்கள். ஆனாலும், அவர்களில் ஒருவன், இயேசுவை நோக்கி “அடியேனை நினைந்தருளும்” என்று மன்றாடினான். அவன் மரிக்கும் தறுவாயில், அவனுடைய உண்மையான மனந்திரும்புதலைக் கண்ட இயேசு அவனுடைய பாவங்களை மன்னித்தார். விடுதலையை பெற்றுக் கொண்டான். துன்மார்க்கத்தில் வாழ்ந்த மற்றய குற்றவாளி, தன் துன்மார்க்கத்தைவிட்டு மனம்திரும்ப மனதில்லாமல், தன் ஆத்துமாவிலே விடுதலையைக் காணாமல் தன் துன்மார்க்கத்திலேயே மரித்தான். மன ந்திரும்பிய குற்றவாளி அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்பியதால் அவன் தன் ஆத்துமாவை நித் திய மரணத்திலிருந்து காத்துக் கொண்டான். ஆம், தேவனுடைய இரக்கம் பெரிது. குற்றங்களை அவரிடத்தில் அறிக்கையிட்டு மனந்தி ரும்பினால் அவர் நிச்சயமாக விடுதலை தந்தருள்வார்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, என் குற்றங்களை மன்னி த்தவரே, நான் ஒருபோதும் என் குற்றங்களை நியாயப்படுத்தாமல் உம்மி டம் கிட்டி சேரும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 103:13

Category Tags: