புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 19, 2020)

உணர்வுள்ள ஜீவியம்

எசேக்கியேல் 18:26

நீதிமான் தன் நீதியை விட்டு விலகி, அநீதி செய்து அதிலே செத் தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான்.


பல வருடங்களாக ஒரு தொழிற்சாலையிலே நன்றாக வேலை பார்த்து வந்த ஒரு ஊழியனுக்கு பதவியுயவர்வு கொடுப்பதற்காக அந்த தொழி ற்சாலையின் இயக்குனர் முடிவு செய்திருந்தார். அதன்படிக்கு, முன் குறித்த நாள் ஒன்றிலே காலை 9 மணிக்கு தலமையகத்திற்கு பயிற்ச் சிக்காக செல்லும் படிக்கு பணிக்கப்பட்டான். குறித்த நாள் நெருங் கியது, அந்த நாளுக்கு முதல்நாள் இரவு அவனுடைய நண்பனொருவன், தன்னுடைய வீட்டில் நடக்கும் கொண் டாட்டமொன்றிற்கு இவனை அழைத்தி ருந்தார். நான் சீக்கிரம் வீடு திரும்பி விடுவேன் என்று தன் மனைவியிடம் கூறிவிட்டு அந்த கொண்டாட்டத்திற்கு சென்றான். குறித்த நேரத்தில் அவன் விடைபெற எத்தனித்தபோது, இப் போது தான் கொண்டாட்டம் ஆரம்பிக் கின்றது, நீ என்ன சீக்கிரமாய் கிளம்பு கின்றாய் என்று அவனுடைய நண்பர்கள் அவனை தடுத்து நிறுத் தினார்கள். உனக்கு கிடைத்திருக்கும் பதவியுயர்வையும் நாங்கள் கொண்டாட வேண்டும் என்று யாவரும் மதுபான கிண்ணத்தை தூக் கினார்கள். ஒரு கொஞ்சம் தான், உன்னுடைய வெற்றிக்காக, எனவே பருகிக் கொள், நீ சாவதில்லை என்று அவனிடமும் ஒரு கிண்ணத்தை கொடுத்தார்கள். இப்படியாக நேரம் போய் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மதுபானத்தை அருந்திக் கொண்டிருந்தவன், குடித்து வெறிக்க ஆரம்பித்துவிட்டான். நடுச்சாமம் சென்ற பின்பு வீடு திரும் பினான். காலையிலே குறித்த நேரத்திற்கு அவனால் எழுந்திருக்க முடி யவில்லை. ஆதலால், பயிற்ச்சியின் நேரத்திற்கு தாமதமாகவே சென் றான். அவனை எதிர்பார்த்திருந்தவர்கள் அவன் அங்கு வந்த போது, அவன் கடந்த இரவிலே அதிகமாக வெறித்திருக்கின்றான் என்பதை அறிந்து கொண்டார்கள். இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு இவ்வளவு பொறுப்பான வேலையை கொடுக்க முடியாது என்று அவனுக்குரிய பதவியுயர்வை தொழிற்சாலையின் உப தலைவர்கள் ரத்து செய்து விட்டார்கள். பிரியமானவர்களே, நீதிபரராகிய இயேசு வெளிப்பட காத் திருக்கும் நாங்கள், மிகவும் ஜாக்கிரதையுள்ளவர்ளாக வாழ வேண்டும். கடைசி நேரத்தில் தேவ வார்த்தையைவிட்டு விலகி எங்கள் ஆத் துமாவை பாவத்திற்கு ஒப்புக்கொடுக்காதபடிக்கு எங்கள் வழிகளை எப்போதும் நாங்கள் காத்துக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

என்னை நீதிமானாய் மாற்றிய தேவனே, பொறுப்பற்ற ஊழியனைப் போல, அற்ப சந்தோஷத்திற்காக நித்திய ஜீவனை இழந்து போய்விடாதபடிக்கு, விழிப்புள்ளவனா(ளா)க வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தெச 5:1-8