புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 17, 2020)

தேவனுக்கு பிரியமானவைகள்

ரோமர் 12:2

தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிற தினாலே மறுரூபமாகுங் கள்.


அன்று தம்மால் தெரிந்து கொள்ளபட்ட ஜனங்கள் நடுவிலே தேவன் பலத்த கிரியைகளை நடப்பித்தார். செங்கடலை இரண்டாக பிளந்தார், தம்முடைய ஜனங்களுக்காக யுத்தம் செய்தார், கசப்பான நீரை மதுர மாக மாற்றினார். வானத்திலிருந்து தூதர்களின் உணவை அவர்களுக்கு கொடுத்தார். பகலிலே வெயில் சேதப்படுத்தாதபடிக்கு அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியை யும் கொடுத்தார். கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப் தியாக்கினார். கன்மலையைத் திற ந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வற ண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று. தம்முடைய ஜனங்கள் நிலையான வாக்குத்தத்தத்தில் விசுவாசமுள்ளவர் களாக இருக்கும்படிக்கு இவைகளை செய்தார். ஆனால் அவர்களோ, வழு விப்போகின்ற இருதயமுள்ளவர்களா னார்கள். பிரியமானவர்களே, இவ் வளவு தேவ நன்மைகளை கண்டும் ஜனங்கள் உணர்வில்லாமல் போனார் களே, எவ்வளவு மதியீனமாய் நடந்து கொண்டார்கள் என்று இன்று அந்த ஜனங்களைக் குறித்து விசுவாசிகள் கூறிக் கொள்வதை நாங்கள் கேட்டிருக்கின்றோம். பிதாவாகிய தேவன் தாமே, ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனையடையும்படிக்கு தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை எங்களுக்காக கொடுத்திருக்கின்றார். அவர் வழியாக எங்களை தம்முடைய பிள்ளைகளாக மாற்றியிருக் கின்றார். ஏன் அப்படியாக செய்தார்? நாங்கள் யாவரும் கிறிஸ்து இயே சுவின் சாயலில் வளர வேண்டும். மனத் தாழ்மையையும் சாந்தத்தையும் அணி ந்து கொள்ள வேண்டும். பிதாவுக்கு பிரியமான பிள்ளையாக எப்படி இயேசு இருந்தாரோ, அதே போல நாங்களும் அவருக்கு பிரி யமான பிள்ளைகளாக அவருடைய திருச் சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதையே அவர் விரும்புகின்றார். சர்வ வல்லமையுள்ள தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். அவர் அன்றும் இன்றும் என்றும் அற்புதங்களை செய்ய வல்லவர். ஆனால் அவர் எங்கள் உள் ளான மனிதனிலே உண்டாகும் மாற்றங்களை விரும்புகின்றார். தேவனுக்கு பிரியமான பிள்ளைகளாக வாழும்படிக்கு, எங்கள் மனம் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுவதாக.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, எங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் உமக்கு பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து, உமக்கு பிரியமான வைகளை செய்ய எங்களுக்கு கற்றுத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபா 4:39-40