புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 16, 2020)

நிலையானதை நோக்கி...

1 யோவான் 2:25

நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.


“செழிப்புள்ள கானான் தேசத்தை சுதந்திரமாக கொடுப்பேன்” என்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு தேவன் வாக்குரைத்திருந்தார். தேவனாகிய கர்த்தர் சொன்னதை அவர் செய்து முடிக்கின்றவர். அவர் நினைத்த காரியம் அவர் குறித்த நேரத்தில் நிறைவேறும். அதை ஒருவரும் தடை செய்ய முடியாது. இப்படியான வாக்குத்தத்தத்தை பெற்ற தேவ ஜன ங்கள் எகிப்திலே அடிமைகளாக இரு ந்தார்கள். பராக்கிரமமுள்ள எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் கையிலிரு ந்து அவர்களை எவராலும் விடுதலை யாக்க முடியாதிருந்தது. தேவனானவர், எகிப்தியர் நடுவிலே சோதனைகளினா லும், அடையாளங்களினாலும், அற்புத ங்களினாலும், யுத்தத்தினாலும், வல்ல மையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புய த்தினாலும், மகா பயங்கரமான செயல் களினாலும், தம்முடைய ஜன ங்களை விடுவித்தார். அவர்கள் முன்னாக இரு ந்த செங்கடல் இரண் டாய் பிளந்தது. அவர்கள் பின்னாக வந்த பார்வோனின் சேனைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக அழிந்து போயிற்று. இப்படியாக தேவன் மனு~னைப் பூமியிலே சிரு~;டித்த நாள்முதல், எவ்விட த்திலாகிலும் செய்யப்படாததும், கேள்விப்படாததுமான பலத்த காரிய ங்களை அந்த ஜனங்கள் கண்ணாரக் கண்டார்கள். ஆனால் அவர்கள் தேவன் நியமித்த ஊழியராகிய மோசேக்கு எதிரா கவும், தேவனுக்கு எதிராகவும் முறுமுறுக்க ஆரம்பித்தார்கள். எதற்காக முறுமுறுத்தார்கள்? வனாந்திரத்திலே சாப்பிட உணவு இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. இறைச்சி இல்லை. இவ்வளவு பெரிதான தேவ மகத்துவங்களை கண்டவர்கள், தேவனிடம் கேட்டால் அவர்களுக்கு அருளாதிருப்பாரோ? நிச்சயமாக அருளிச் செய்வார். செழிப்புள்ள தேசத்திற்கு கொண்டு செல்வேன் என்று வாக்களித்தவர் அதை செய்யாதிருப்பாரோ? நிச்சயமாக நிறைவேற்றி முடிப்பார். இவற்றை நன்கு அறிந்திருந்தும் தேவனுடைய வார்த்தையை விசுவாசியாமற்போன படியினாலே, தாங்கள் தாபரிக்கும் ஊருக்கு செல்வதை அற்பமாக எண்ணி, தற்போது தங்கள் எண்ணப்படி உண்ணவும், உடுக்கவும், களியாட்டங்களில் ஈடுபடவும் தங்கள் மனதை மாற்றிக் கொண்டார்கள். பிரியமானவர்களே, இப்படிப்பட்ட விசுவாசமற்ற கிரியைகளை முற்றுமாய் அகற்றி விடுங் கள். வாக்குரைத்த தேவன், நித்திய வாழ்வை எங்களுக்கு தருவார் என்பதிலே உறுதியாய் நிலைத்திருங்கள்.

ஜெபம்:

ஜீவனுள்ள தேவனே, உம்மைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் எனக்குண்டாதபடிக்கு, உம் வாக்குத்தத்தத்தை பற்றிக் கொள்ளும் உறுதியுள்ள இருதயத்தைத் தாரும். இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 3:12