புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 14, 2020)

ஜெபத்தினால் உண்டாகும் விடுதலை

மத்தேயு 9:12

இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத் தியன் வேண்டியதேயல் லாமல் சுகமுள்ளவர்களு க்கு வேண்டியதில்லை.


இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனு~னைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான். பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக் காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீ~ரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீ~ர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்கா ரரோடும் பாவிகளோடும் போஜனம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார் கள். இயேசு அதைக் கேட்டு: பிணி யாளிகளுக்கு வைத்தியன் வேண்டிய தேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை என்று கூறினார். அக்காலத்திலே வாழ்ந்த ஆயக்காரர் என்ற பிரிவினர் ரோமருக்கு வரி வசூலிப்பவர்களும், அநியாயம் செய்கின்றவர்களாயும் இருந்தார்கள். இப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவனும், தன்னை நீதிமான் என்று நம்பிய பரிசேயனுமே ஜெபி ப்பதற்காக சென்றார்கள். பரிசேயன், ஆயக்காரனை குறித்து கூறிய வைகள் உண்மை. ஆனால், ஜெபம் செய்யச் சென்ற ஆயக்காரன், பரிசேயன் கூறியவற்றைக் குறித்து அலட்டிக் கொள்ளாமல். தேவனை நோக்கிப் பார்த்தான். தன் நிலையை ஏற்றுக் கொண்டு தன்னை தேவ சமுகத்திலே தாழ்த்தினான். தன் பாவத்தை அறிக்கையிட்டான். விடுத லையை பெற்றுக் கொண்டான். நீதிமானாக வீடு திரும்பினான். பிரியமா னவர்களே, சில வேளைகளிலே எங்களைக் குறித்து மற்றவர்கள் கூறும் குறைகள் உண்மையுள்ளவைகளாக இருக்கலாம். அந்த நேரங்களிலே உங்கள் நிலையை நியாயப்படுத்த முயலாமல், தேவனுடைய சமுகத்திலே உங்களைத் தாழ்த்தி, அவரிடம் உண்மையை கூறுங்கள். “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.” (1யோவான் 1:9) கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையு முள்ளவர். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய் யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக் கட்டாமலும் இருக்கிறார். ஜெபத்தின் பலனை பெற்றுக் கொள்ளு ம்படிக்கு உண்மையுள்ள மனதுடன் தேவனைச் கிட்டிச் சேருவோம்.

ஜெபம்:

மனதுருகும் தேவனே, என்னுடைய குறைவுகளை ஒருபோதும் நியாயப்படுத்தாமல் உம்முடைய இரக்கத்தை பெறும்படிக்கு உண்மை யோடு உம்மை அண்டிச் சேரும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 103:8-13