புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 13, 2020)

தேவனுக்கு பிரியமான ஜெபம்

எசேக்கியேல் 18:23

துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.


துன்மார்க்கன் தன் துன்மார்க்க வழிகளினாலும், பாவிகள் தங்கள் பாவ ங்களிலும் அழிந்து போவதைக் குறித்து தேவன் பிரியப்படுகின்றவர் அல் லர். தங்களை நீதிமான்கள் என்று அழைக்கின்ற மனிதர்களை அல்ல, பாவிகளை விடுதலையடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவே இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். தேவ ஆலயத்திற்கு ஜெபம் செய்ய சென்ற இரண்டு மனிதர்களில் ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயர் என்ற குழுவி னர் அன்றைய சமுதாயத்திலே பெரு ம் கனத்தை பெற்றிருந்தார்கள். ஆனா ல் ஆயக்காரர் என்பவர்களோ சமுதா யத்தினாலே புறக்கணிக்கப்பட்டிருந்தா ர்கள். அவர்கள் சமுதாயத்தினாலே ஒடுக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். ஆயக்காரர் உண் மையிலே சீர்கேடான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஆனால் ஜெபிக்க ச் செல்லும் தேவனுடைய நீதிமானின் பண்பு என்ன? சீர்கேடானவனுடைய வாழ்க்கையைக் கண்டு அவன் தன் பாவத்தில் அழிந்து போக வேண்டும் என்று எண்ணங் கொள்வது சரியாகுமா? அல்லது தேவனே இவனு டைய ஆத்துமாவும் பாதாளத்தில் அழிந்து போகாதபடிக்கு அவன் தன் வழிகளிலிருந்து விடுதலையடைய கிருபை செய்யும் என்று கூறுவது சரியாகுமா? ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையு ம்படிக்கு பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை இந்த உலகிற்கு அனுப்பினார். எனவே, தேவனாலே நீதிமான்களாக் கப்பட்ட நாங்கள் ஜெபிப்பது இன்றியமையாதது. ஆனால் ஜெபிக்கும் போது, தேவனுக்கு பிரியமானவைகள் என்ன என்பதை அறிந்து அத ன்படி நாங்கள் ஜெபிக்க வேண்டும். எங்களுடைய வாழ்க்கையில் இரு க்கும் தேவ சமாதானத்திற்காக தேவனுக்கு நன்றி கூறுகின்ற வேளை யிலே, தேவ சமாதானத்தை இழந்து இந்த உலகின் இருளுக்குள் அகப்பட்டிருக்கும் ஆத்துமாக்களும் தேவனிடம் திரும்ப வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்க வேண்டும். திறப்பின் வாசலிலே நின்;று அக் கிரமங்களும் அநியாயங்களும் ஒழிந்து போகும்படியாக தேவனை நோக்கி தினமும் ஜெபிக்கின்ற தேவனுக்கு பிரியமான பிள்ளைகளாக நாம் வாழ வேண்டும்.

ஜெபம்:

அன்புள்ள தேவனே, பாவ சேற்றிலே வாழ்கின்ற மனிதர்கள் தங்கள் உணர்வற்ற வாழ்க்கையின் நிமித்தம் அழிந்து போகாதபடிக்கு, அவர்கள் யாவரும் உம்மிடம் திரும்ப கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எசேக்கியேல் 22:30