புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 12, 2020)

சுய பெருமை

லூக்கா 18:14

ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.


இந்த உலகிலே தங்களை நீதிமான்களென்று கூறிக் கொண்டு, மற்றய மனிதர்களை அற்பமாக எண்ணுபவர்களை நாங்கள் கண்டிருக்கிறோம். சில வேளைகளிலே தேவனுடைய பிள்ளைகளும் அப்படிப்பட்ட பெரு மைக்குள் தங்களை அறியாமலே சிக்கிக் கொள்வதுண்டு. இவ்வண் ணமாகவே இயேசு இந்த உலகிலே வாழ்ந்த நாட்களிலே பரிசேயர் என்ற ஒரு சாரார் இருந்தார்கள். இப் படிப்பட்டவர்களைக் குறித்து இயேசு ஒரு உவமையை கூறினார். இரண்டு மனு~ர் ஜெபம்பண்ணும்படி தேவால யத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரி சேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசே யன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இரா ததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் என்றான். ஆயக்காரன் தூரத் திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். இந்த பரிசேயன் கூறியவற்றில் அவன் தன் வாழ்க்கையை குறித்து கூறியவற்றிலும், அந்த ஆயக்காரனைக் குறித்து கூறியவற்றிலும் உண்மை இருந்தது. பரிசேயரிடத்தில் தங்கள் மதத்தை குறித்த வைராக்கியம் அதிகமாக இருந்தது. இவர்களில் அநேகமா னோர், மத சடங்காச்சாரங்களை கிரமமாக பின்பற்றி வந்த போதிலும் தேவனுடைய நியாயத்தையும், தேவனுடைய அன்பையும் குறித்த உண ர்வற்ற இருதயமுடையவர்களாக இருந்து வந்தார்கள். இதனால் பெரு மையும், சுயநீதியும் அவர்கள் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தது. தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கின்றார் தாழ்மையுள்ள வர்களுக்கோ கிருபை அளிக்கின்றார். எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது. பிரியமானவர்களே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழு வப்பட்டு, பரிசுத்தமாக்கப்படடு, நீதிமான்களாக்கப்பட்டிருக்கின்றோம். இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியை களினால் உண்டானதல்ல. எனவே தேவனுடைய அன்பின் ஆழத்தை யும் அதன் நோக்கத்தையும் உணர்ந்து கொள்ளுங்கள். எந்த ஒரு சமய த்திலும் சுயபெருமை எங்களை ஆட்கொள்ளாதடிக்கு எங்கள் இருதய ங்களை காத்துக் கொள்ளவேண்டும்.

ஜெபம்:

இருதயத்தை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, எந்த ஒரு சமயத்திலும் என்னுடைய கிரியைகளைக் குறித்து சுய பெருமை அடைந்து விடாதபடிக்கு என்னை காத்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 64:6