புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 11, 2020)

வீட்டின் சூழ்நிலைகள்

கலாத்தியர் 6:8

தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்ச த்தினால் அழிவை அறு ப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியி னாலே நித்தியஜீவனை அறுப்பான்.


ஒரு ஊரிலே வசித்து வந்த மனிதனானவன், மோட்டார் வண்டிகளை பழு துபார்ப்பதில் தேர்ச்சிபெற்றவனாக இருந்ததால், அவன் தன் வீட்டின் ஒரு கோடிப் பக்கமாக வைத்து ஊரிலுள்ள மனிதர்களின் மோட்டார் வண்டிகளை பழுதுபார்த்து தனக்கு ஆதாயம் உண்டுபண்ணினான். அந்த சூழ்நிலையிலே வளர்ந்து வந்த அவன் குடும்பத்தார் அனை வரும், மோட்டார் வண்டிகளைக் குறித்த காரியங்களை அனுதினமும் கேட்டு வந்ததால், அவர்களும் மோட் டார் வண்டிகளைக் குறித்து அறிவுட யவர்களாக இருந்தார்கள். இதனால் அவனுடைய பிள்ளைகள் தங்கள் இளம்வயதிலேயே பலதிருத்த வேலை களை செய்து வந்தார்கள். கருப்பொ ருளாவது, பொதுவாக மனிதர்கள் வள ர்ந்து வரும் சுற்றாடல் அவர்களின் அறிவையும் பழக்கவழக்கங்களையும் மாற்றும் ஒரு முக்கிய காரணியாக உள் ளது. ஒரு வீட்டிலே காலையிலிருந்து மாலை வரைக்கும் சினிமா திரைப்பட ங்களே ஓடிக் கொண்டிருக்குமென்றால் அங்கு வளர்ந்து வரும் சிறார்கள் திரைப்படங்களையும், நடிகர்களையும், அதன் பாடல்களையும் நன்கு அறிந்தவர்களாக வளர்ந்து வருவார்கள். இன்னுமொரு வீட்டிலே, தேவ னை புகழ்ந்து பாடும் சங்கீதங்களும், கீர்த்தனைகளும், ஞானப் பாட்டு களும், வேத வார்த்தைகளும் பேசப்படுமென்றால் பிள்ளைகளும் அந்த சூழ் நிலைகளிலே அவற்றை பற்றிக் கொள்வார்கள். இன்று பிள்ளை கள் தேவ பயத்துடன் வளர்ந்து வருவதற்கு தடையான காரியங்களை பல பெற்றோரும் மூத்தவர்க ளும் வீடுகளிலே செய்து வருகின்றார்கள் என்பதை செய்திகள் வாயிலாக அறிந்து கொள்கின்றோம். தங்கள் வீடுகளை மதுபான சாலையாகவும், சினிமா கொட்டகைகளாகவும், களி யாட்ட விடுதிகளாகவும் (Pயசவல ர்ழரளந), தகாத வார்த்தைகளை பேசுமிட மாகவும், சண்டைகளை பிணைக்குமிடமாகவும் மாற்றிக் கொள்கின்றா ர்கள். இது ஒரு பரிதாபமான நிலை. மனிதன் எதை விதைக்கின்றானோ அதையே அறுப்பான் என்று வேதம் தெளிவாக கூறுகின்றது. எனவே நீங்கள் எத்தகைய சூழ்நிலைகளை உங்கள் வீடுகளில் நாளாந்தம் ஏற்ப டுத்துகின்றீர்கள் என்பதைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள். யாவரும் தேவ பயத்தோடு வாழும்படிக்கான சூழ்நிலைகளை எங்கள் இல்லங்களிலே நாங்கள் ஏற்படுத்த வேண்டும்.

ஜெபம்:

அன்பின் தகப்பனே, பயபக்தியோடு உம்மை சேவிப்பதற்கு தடையான சூழ்நிலைகளை நான் ஏற்படுத்தாமல் பரிசுத்தத்தை காத்துக் கொள்ளும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்ச கர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6