புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 09, 2020)

உங்கள் வழிகளை ஆராய்ந்து பாருங்கள்

சங்கீதம் 119:59

என் வழிகளைச் சிந்தித்துக் கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத்திருப்பினேன்.


வருடத்தின் மூன்றாம் காலாண்டு முடிந்த நிலையிலே, தனது ஸ்தாப னத்தின் முன்னேற்றத்தை மறுசீராய்வு செய்வதற்காக, ஸ்தாபனத்தின் உரிமையாளர், தான் நியமித்த ஸ்தாபன நிர்வாகிகளோடு கூட்டம் கூடினார். தேசிய பொருளாதாரம் ஆட்டம் கண்டிருக்கும் வேளையிலும், இந்த ஆண்டிற்கான ஸ்தாபனத்தின் குறிக்கோளை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், அதை அடை வதற்குரிய வழிகளை தீவிரமாக ஆரா ய்ந்து பார்த்தார்கள். இப்படியாக ஒவ் வொரு காலாண்டும் முடியும் போது செய்து வந்தார்கள். ஆண்டு இறுதி யிலே, தாங்கள் தோல்வியடைந்த இட ங்களிலே கற்ற பாடங்களையும், புதிய ஆண்டிலே எவ்விதமாக பின்னடைவு களை தவிர்த்துக் கொள்ளலாம் என்றும் ஆராய்ந்து வந்தார்கள். பிரி யமான சகோதர சதோதரிகளே, அந்த ஸ்தாபனத்தின் உரிமையாளரின் விடா முயற்சியை சற்று சிந்தித்துப் பாருங்கள். இந்த உலகத்தோடு அழிந்து போகும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பதற்காக தன்னுடைய வியாபரத்தின் நிலையை முன் குறித்த நாட்களில் ஆராய்ந்து பார்த்தார். அழியாத ராஜ்யத்தின் உடன் சுதந்திரர்களாக அழைப்பை பெற்ற நாம் எவ்வளவு அதிகமாக எங்கள் நிலைமைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதாவது, கிறிஸ்துவின் சாயலை அணியும்படியாக, எங்கள் உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக வேண்டும். கடந்த ஆண்டிலே விட்ட குறைகள் என்ன? அந்தக் குறைக ளிலே நாம் தரித்து நிற்கின்றவர்கள் அல்லர். அந்த குறைகளிலே நாங்கள் கற்றுக் கொண்ட பாடம் என்ன? எப்படி இந்த ஆண்டிலே மறு படியும் அந்த விடயத்திலே பின்னடைவைக் காணாமல் முன்னேறிச் செல்வது? இப்படியாக எங்கள் மேலான இலக்கை அடையும் வரைக் கும் நாங்கள் எங்கள் எங்கள் சொந்த வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தேவனை அறிக்கின்ற அறிவிலே நாம் முன்னேறிச் செல்ல வேண்டும். இப்படிப்பட்ட எண்ணம் ஆண்டின் முதலாம் நாளோடு முடிந்து போகக் கூடாது. கர்த்தருடைய வேதத்தை இரவும் பகலும் தியானிக்கும் போது, எங்களுடைய வாழ்க்கையை நாங்கள் அந்த வார்த்தையின் வெளிச்சத்தில் தினமும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆராய்ந்து பார்த்து நலமானதைப் பற்றிக் கொள்ளும்படி தீர்மானம் செய்ய வேண்டும். துணையாளராகிய தேவ ஆவியானவர் எங்களை பெலப்படுத்தி வழிநடத்துவார்.

ஜெபம்:

பரிசுத்தமான தேவனே, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் என் வழிகளை ஆராய்ந்து பார்த்து உம்மை கிட்டிச் சேர நீர் என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 13:5