புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 08, 2020)

பெலவீனங்களை மேற்கொள்ளுங்கள்

கலாத்தியர் 5:24

கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.


தன் வாலிபநாட்களிலே திடகாத்திரமாக இருந்த மனிதன் மாதத்தில் ஒரு சில தடவைகள் புகைப்பிடிக்கும் பழக்கமுடையவனாயிருந்தான். குறிப் பிட்ட அவனுடைய நண்பர்களில் சிலர் புகைப்பிடிக்கும் பழக்கமுள்ளவர் களாக இருந்ததால், அவர்களை சந்திக்கும் போது, அவர்கள் மத்தி யிலே அவர்களை போல இருக்கும்படிக்கு அதை செய்து வந்தான். அது அவனுக்கு ஒரு பிரச்சனையாக தோன்றவில்லை. நான் எப்போதா வது ஒரு தரம் புகைப்பிடிப்பவன் (casual smoker) என்பதை பெருமையாக சொல்லிக் கொள்வான். காலங்கள் கடந்து சென்று, அவன் திருமணமாகி பிள்ளைகளுடன் இருக்கும் நாட்களி லே, அவனுடைய வேலையிலே எதிர் பாராத பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அத்துடன் அவன் வீட்டில் நடந்த ஒரு சம்பவமும் அவனுக்கு அதிக மன அழுத்தத்தை கொடுத்தது. அதனால் அவன் சரீரத்திலே பெலவீனமேற்பட்டது. தரித்தி ருந்து நிதானமாக சிந்திக்க முடியாமல் அவன் மனம் குழம்பியிருந்தது. இதனால், அவனிடமிருந்து தவறான புகைப்பிடிக்கும் பழக்கம் பெலன டைய ஆரம்பித்தது. மாதத்திற்கு சில தடவை புகைத்தவன், இப்போது நாளாந்தம் பல தடவைகள் புகை பிடிக்க ஆரம்பித்தான். தன்னுடைய புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு தன் வேலையாலும், குடும்பத்தாலும் ஏற் பட்ட அழுத்தமே காரணம் என்று சொல்லிக் கொண்டான். வேலையி லும் வீட்டிலும் ஏற்பட்ட அழுத்தமல்ல, அவன் தன் பெலனுள்ள நாட் களிலே தன் வாழ்வில் பாராமுகமாக விட்டுவைத்த பெலவீனமே கார ணம். இப்போது அவன் சூழ்நிலைகளால் நெருக்கப்படும் போது, சிறி தாக இருந்த பெலவீனம் அவன் வாழ்க்கையை மேற்கொண்டுவிட்டது. தாவீது என்னும் பக்தன், இஸ்ரவேலை ஆளும் ராஜாவாக இருந்த போதிலும், வாழ்வில் ஏற்படும் விக்கினங்கள் கடந்து செல்லும் மட்டும் உன்னதமானவருடைய மறைவிலே அடைக்கலம் புகுந்து கொண்டான். இது அவருக்கு ஏதேட்சையாக ஏற்பட்ட பழக்கம் அல்ல, தன் வாலிப நாட்களிலிருந்து, தாவீது, எல்லா சூழ்நிலைகளிலும்; தேவனை அண்டி வாழ்கின்றவராக இருந்து வந்தார். பிரியமானவர்களே, நீங்கள் விட்டு வைத்திருக்கும் தவறான பழக்கங்கள் உங்கள் வாழ்க்கையை மேற்கொ ள்ளும் முன்பதாக, நீங்கள் அவைகளை மேற்கொண்டு விட்டுவிடுங்கள்.

ஜெபம்:

முடிவில்லா வாழ்விற்கு என்னை அழைத்த தேவனே, நீர் தந்த மீட்பிற்கு நன்றி. என்னால் செய்ய முடியாத நற்கிரியையை செய்து முடிக்க எனக்கு பெலன் தந்து வழிநடத்துவீராக.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 57:1-2