புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 07, 2020)

ஜீவனுள்ள தேவனுடைய ஆலயம்

2 கொரிந்தியர் 6:16

நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.


மேற்கத்தைய நாடு ஒன்றிலே, ஒரு மனிதன் தன் பிழைப்பிற்காக செல் லப்பிராணிகளை விற்கும் வியாபாரத்தை செய்து வந்தான். அதற்காக இரண்டு மாடியுள்ள ஒரு இடத்தை வாடகைக்கு எடுத்து, அதன் கீழ் தட்டிலே செல்லப்பிராணிகளை கூடுகளிலே அடைத்து வைத்;திருந்தான். மேல் தட்டிலே, அவன் வசித்து வந்தான். இந் நாட்களிலும் பல வகையான வன விலங்குகள், ஊர்வன போன்றவற்றை அநேக இடங்களிலே செல்லப் பிராணிகளாக வளர்த்து வருகின்றார்கள். இந்த வியாபாரியும், மலைப்பாம்பு ஒன்றை தன் கடையிலே விற்பனைக்காக வைத்திருந்தான். ஒரு காலையிலே, மேல் மாடியிலே தங்கியிருந்த இர ண்டு சிறு பிள்ளைகள் அவர்கள் படு க்கையிலே மரித்து போயிருந்தார்கள். அந்த வியாபாரி, தன் கடைக்குள் இருந்த மலைப்பாம்பு அதன் கூட்டி ற்குள் இல்லாதிருந்ததைக் கண்டு கொண்டான். கடந்த இரவு அந்த பாம்பு தன் கூட்டிலிருந்து தப்பிச் சென்று அந்த இரண்டு சிறுவர்களை யும் கொன்று போட்டது என்பதை பொலிசார் உறுதி செய்து கொண் டார்கள். ஆம். கேட்பதற்கு மிக துக்க மானதும் கொடூரமானதுமான உண் மைச் சம்பவம். இன்று அவர்களை குறித்து கவலையடையாமல், எங்கள் இருதயத்தை நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மலைப் பாம்பு இருக்க வேண்டிய அதன் இடம் உண்டு. அந்த இடம் மனிதர்கள் வாழும் இல்லங்கள் அல்ல. அது போலவே, மாம்சத்திற்குரிய கிரியை களாகிய பொருளாசை, மோகபாவம், களியாட்டங்கள் போன்றவை தங்குமிடம் எங்கள் இருதயம் அல்ல. அவைகளை நாங்கள் கட்டுப்படு த்தி, இருதயத்திற்குள்ளே அடக்கி வைத்திருக்கலாம். ஆனால், கூட்டை விட்டு செல்ல சந்தர்ப்பத்தை பார்த்திருந்த அந்த மலைப் பாம்பைப் போல, இருதயத்தில் இருக்கும் மாம்ச கிரியைகள் அதன் கிரியை களை நடப்பிக்கும்படி அதை கொண்டிருப்பவர்களின் வாழ்விலே வெளி ப்படுத்தும். அந்த நாளிலே அவர்களுடைய வாழ்க்கையிலே அவை பெரும் பாதகத்தை உண்டு பண்ணும். எங்கள் இருதயம் தேவன் தங் கும் ஆலயம். அந்த ஆலயத்தில் பொருளாசை, மோக பாவம், களி யாட்டங்களுக்கு இடம் கொடுக்காதிருங்கள். இருளின் அந்தகார கிரி யைகளை இருதயத்தில் மறைத்து வைக்காதிருங்கள். ஒருவன் தேவனு டைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனு டைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, நான் பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கு என்னை வேறுபிரித்தீர். உம்முடைய ஆவியை எனக்கு தந்தீர். மாம்சகிரியைகளுக்கு இடம் கொடுக்காமல் வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:16-25