புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 06, 2020)

இரக்கங்களின் பிதா

புலம்பல் 3:22

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை


எங்கள் ஆதி பெற்றோராகிய ஆதாம் ஏவாளின் சம்பவத்தைக் குறித்து நாங்கள் யாவரும் அறிந்திருக்கின்றோம். தேவனுடைய சத்தத்திற்கு கீழ் படிவதைப் பார்க்கிலும், வலுசர்ப்பமாகிய சாத்தானுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்து, தேவனானவர் செய்யக் கூடாது என்று கூறிய காரியத்தை செய்தார்கள். அந்த வேளையிலே தேவனானவர் அவர்களோடு பேசி னார்: அப்பொழுது தேவனாகிய கர்த் தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட் டத்திலே கேட்டு, நான் நிர்வாணி யாயிருப்பதினால் பயந்து, ஒளித்து க்கொண்டேன் என்றான். அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விரு ட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். அதாவது மனிதர்கள் அன்றும் இன்றும் தங்களுடைய செயற்பாடுகளை நியாயப்படுத்து வதற்கு முந்திக் கொள்கின்றார்கள். பிதாவாகிய தேவன் எங்கள் இரு தயங்களை ஆராய்ந்து அறிகின்றவர் என்றும், அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை என்பதை நன்றாக அறிந்திருந்தும். தற்போது அகப்ப ட்டிருக்கும் பிரச்சனையான சூழ்நிலையி லிருந்து எப்படியாவது தப்பிக்; கொண்டால் போதும் என எண்ணுகின்றார்கள். இதனால் மனிதர்கள் முன்னிலையிலே தங்கள் கிரியைகள் சரி, அல்லது அது பிழைத்தால் அது என்னுடைய பிழையல்ல, மற்றவனாலே உண்டானது என நியாய ப்படுத்த முயற்சிக்கின்றார்கள். அப்படியாக சில வேளைகளிலே சில பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்கின்றார்கள். பிரியமானவர்களே, நாங்கள் யாவரும் தேவனுக்கு முன்பாக நிற்க வேண்டிய நாள் ஒன்று உண்டு. தேவனுடைய நீடிய பொறுமையை அச ட்டை செய்யாமல், கொடுக்கப் பட்டிருக்கும் கிருபையின் நாட்க ளிலே, தேவனிடத்திலே சேருவோம். எங்களுடைய தேவன் இரக்கமுள்ளவர் எனவே தயங்காமல் அவர் முன்னிலையில் உங்களை தாழ்த்துங்கள்.

ஜெபம்:

கிருபை நிறைந்த தேவனே, உம்மிடத்திலே விடுதலை உண்டு என்பதின் கருப்பொருளை உணர்ந்தவனா(ளா)க, உம் சமுகத்திலே உண் மையை பேசும் உள்ளத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 103:8-10