புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 05, 2020)

தகப்பனுக்கு பிரியமான பிள்ளை

மத்தேயு 3:8

மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.


தெருவுக்கு அப்புறமாக இருக்கும் காட்டுப் பகுதிக்கு செல்லக் கூடாது என்று ஒரு தகப்பனானவர் தன் மூன்று இளம் குமாரர்களுக்கும் மிகவும் தெளிவாக கூறியிருந்தார். அங்கு செல்வதால் வரக்கூடிய ஆபத்துக் களை குறித்து அவ்வப்போது தன் பிள்ளைகளுக்கு ஞாபகப்படுத்தி வந் தார். ஒரு நாள் அயலிலே வசித்து வந்த வாலிபர்களில் ஒரு சிலர் அந் தக் காட்டுப் பகுதிக்குச் செல்ல தீர்மானி த்திருந்தார்கள். அங்கு சென்று வரு வது ஒரு வீரதீரச் செயல், ஆபத்துக் களை கண்டு நாங்கள் பயப்படுகின்றவ ர்கள் அல்லர் என்று அந்த மூன்று இளம் குமாரர்களுக்கும் கூறி, அவர் கள் அற்ப காரியங்களுக்கு பயந்தவ ர்கள் என்று கேலி செய்தார்கள். அதனால், அந்த குமாரர்களில் மூத்த வன் அவர்களோடு கூடிச் செல்வதற்கு முடிவெடுத்தான், அவனை தொட ர்ந்து அவனுடைய தம்பிமாரும் அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள். அன்றைய நாளிலே அந்த காட்டுப் பகுதிக்குள் வந்த சில வனவிலங் குகள் அங்கு சென்ற யாவரையும் கடித்து காயப்படுத்தின. அவர்களின் அவலக் குரலைக் கேட்ட பெரியவர்கள் அங்கு சென்று உயிர்ச் சேதமி ல்லாமல் அவர்களை காப்பாற்றினார்கள். தகப்பனானவர் தன் மூன்று குமாரர்களையும் நோக்கி: நான் உங்களை அங்கு செல்ல வேண்டாம் என்று பல முறை கூறியிருக்கின்றேன். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டார். மூன்றாவது குமாரன், தன் அண்ணன்மார் சென்றார்கள் ஆகவே நானும் சென்றேன் என்றான். மூத்தவன்: அயலில் வசிக்கும் நண்பர்கள் கேலி செய்தார்கள் அதனால் நான் சென்றேன் என்றான். இரண்டாவது குமாரன்: அப்பா, உங்களுடைய சொல்லைக் கேளாமல் குற்றம் செய்தேன். இனி இப்படியான காரியத்தை செய்யமாட்டேன். என் னை மன்னித்துவிடுங்கள் என்று மனம்வருந்தினான். இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள், இவர்கள் மூவரில், எந்தக் குமாரனில் தப்பனானவர் பிரியமாக இருப்பார்? தங்கள் குற்றங்களுக்கு சாட்டுப் போக்குகளை சொல்லும் மூத்தவனிடமும் இளையவனிடமுமா? அல்லது தன்னுடைய குற்றத்தை உணர்ந்து மனந்திரும்பிய இரண்டாவது குமாரனிடமா? நிச்சயமாக மனந்திரும்புதலுக்குரிய கனியை கொடுக்கும் தன் இரண்டாவது குமாரனின் கிரியையில் பிரியமாயிருப்பார். அது மட்டுமல்ல, தன்னுடைய மற்றய குமாரர்களும், இரண்டாவது குமாரனு க்குரிய இருதயத்திற்கொத்தவர்களாக மாற வேண்டும் என்பதையே அவர் விரும்புவார்.

ஜெபம்:

இரக்கங்களின் பிதாவே, நான் தவறுகின்ற நேரங்களிலே, சாட்டு போக்குகளை சொல்லாதபடிக்கு, என் நிலையை உள்ளபடி உம்மிடம் கூறி மனந்திரும்பும் இருதயத்தை எனக்குத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 51:17