புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 03, 2020)

என்றென்றுமுள்ள சுதந்திரம்

சங்கீதம் 37:18

உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக் கும்.


துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன் பேரில் பற்கடிக்கிறான். ஆண்டவர் துன்மார்க்கனைப்பார்த்து நகைக்கி றார்;. துன்மார்க்கனின் நாள் வருகிறதென்று காண்கிறார். சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மையாய் நடக்கின்ற உத்தம மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங் கள் வில்லை நாணே ற்றுகிறார்கள். ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்க ளுடைய இருதயத்திற்குள் உருவிப் போம்; அவர்கள் வில்லுகள் முறியும். அநேக துன்மார்க்கருக்குள்ள செல் வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானு க்குள்ள கொஞ்சமே நல்லது. துன்மா ர்க்கருடைய புயங்கள் முறியும்; நீதி மான் களையோ கர்த்தர் தாங்குகிறார் என்று சங்கீதப் புத்தகத்திலே வாசி க்கின்றோம். பிரியமானவர்களே, இந்த பூமியிலே வாழும் நாட்களிலே, பிதா வாகிய தேவனுடைய சித்தத்தை நாங்கள் நிறைவேற்றி முடிப்பதே எங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். அந்த நோக்கத்தை குலைத்துப் போடு வதற்காக, எங்களுக்கு எதிராக பல சக்திகள் செயற்பட்டு வருகி ன்றது. எங்கள் சிந்தையை தேவனுடைய உன்னதமான நோக்கத்திலி ருந்து மாற்றிவிட வேண்டும் என்பதே அந்த தீய சக்திகளின் நோக்கம் எனவே மிகவும் விழிப்புள்ளவர்களாக இருங்கள் என்று பரிசுத்த வேதா கமம் எங்களுக்கு அறிவுரை கூறுகின்றது. பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே. நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமை கொள் ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும் பூண் டைப்போல் வாடிப்போவார்கள். கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத் தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். கர்த்தரிடத்தில் மனம கிழ்ச்சியாயிரு. அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு. அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். உன் நீதியை வெளிச்சத்தைப் போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலை ப்போலவும் விள ங்கப்பண்ணுவார் (சங்கீதம் 37). உலகத்திலே நடக்கும் அநீதியின் செயல்களை கண்டு, அவைகளை மாம்சத்திலே மேற்கொ ள்ள முயலாதிருங்கள். உங்கள் உத்தமத்தைவிட்டு விலகாமல் கர்த்தரு க்குக் காத்தி ருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்ளுங்கள். அழியாத நித்திய சுதந்திரத்தை தேவன் உங்களுக்கு தந்தருள்வார்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, துன்மார்க்கரின் வழிகளை கண்டு என் தூய வாழ்வை நான் கெடுத்துக் கொள்ளாதபடிக்கு உம்மு டைய நேரத்திற்காக காத்திருக்கும் பொறுமையைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:15-17