புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 02, 2020)

தேவ நீதி வெளிப்படும் நாள்

ரோமர் 10:11

அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.


ஒரு ஊரிலே வசித்து வந்த இரண்டு குடிமக்களுக்கிடையிலே பெரும் வழக்கொன்று ஏற்பட்டுவிட்டது. ஒரு மனிதனானவன் தன் அயலவனுக்கு அநியாயம் செய்துவிட்டு, அதை மூடி மறைப்பதற்காகவும், தன் குற் றத்தை அயலவன் மேலே போட்டு விடுவதற்காகவும், அநேக யுக்திகளை கையாண்டான். அதனால், அந்த ஊரி லுள்ள சிலர், அந்த அயலவனை கார ணமின்றி நிந்தித்தார்கள். சிலர் அவ னை பகைத்தார்கள். அவன் பலர் முன் னிலையிலே அவமானம் அடைந்தான். தன் வழக்கிற்காக பல பல இன்னல்க ளோடு சுமார் ஆறுமாதங்களாக பொறு மையோடு காத்திருந்த அந்த அயல வனுக்கு, வழக்கின் நாளானது வந்தது. குறித்த ஊரை அரசாண்ட ராஜா தன் சிங்காசனத்திலே அமர்ந்தான். வழக்கு விசாரிக்கப்பட்ட போது, அந்த அயலவன் நிரபராதி என்றும், அவன் மேல் வீண்பழி சுமத்த ப்பட்டது என்றும் அறிந்து கொண்ட ராஜா, கடும் கோபமடைந்து. குற்ற மிழைத்த அந்த மனிதனானவனை தண்டித்து, கடும் காவலிலே போடு வித்தான். அந்த அயலவனோ விடுதலை பெற்று சமாதானத்துடன் வீடு திரும்பினான். சொற்ப காலம் அநியாயத்தை அனுபவித்த அந்த அயல வன் ராஜாவின் முன்னிலையிலே சமாதானம் அடைந்தான். தன் அநியா யத்திலே களிகூர்ந்திருந்தவன்; ராஜாவின் முன்னிலையிலே பெரும் அவமானத்தை அடைந்தான். பிரியமானவர்களே, இந்த நாட்களிலே, தேவனுக்கு பிரியமாக அவருடைய வழியிலே வாழ்பவர்கள், பல துன் பங்களை எதிர்நோக்குகின்றார்கள். நீதி நியாயம் எங்கே என்று வாடு கின்றார்கள். வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளை யும் காவலையும் அநுபவிக்கின்றார்கள்;. அநியாயங்களை சகித்து நீதியைக் காணாமல் கர்;த்தருக்குள் நித்திரையடைந்திருக்கின்றார்கள்;. ஆனால் ராஜாதி ராஜாவாகிய இயேசு நியாயத்தீர்ப்பு செய்யும்படி சிங்காசன த்தின் மேல் வீற்றிருக்கும் நாளொன்று உண்டு. அவருக்கு மறைவான காரியம் ஒன்றுமில்லை. பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்க ளாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். இந்த பூமியிலே ஆண்டுகள் முடிந்து போனாலும், தேவனுடைய ஆளுகைக்கோ முடிவில்லை. தேவாதி தேவனை விசுவாசித்து அவருக்காக காத்திருக்கின்றவர்கள் ஒரு போதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்தவரே, நெருக்கடியான நேரத்திலும், என்னிடத்திலிருக்கும் உம்முடைய சுபாவங்களை வெளிக் காட்டும்படிக்காய் எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - தானியேல் 12:2