புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 28, 2020)

எதிரிடையான சூழ்நிலைகள்

எபேசியர் 5:20

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழு தும் எல்லாவற்றிற்காக வும் பிதாவாகிய தேவ னை ஸ்தோத்திரித்து,


பிலிப்பி பட்டணத்திலே குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் இருந்தாள். ஒரு நாள் பவுல் மற்றும் சீலா என்னும் தேவ ஊழியர்கள் அவளை கண்டபோது, நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளை யிடுகிறேன் என்று பவுல் அந்த குறிசொ ல்லுகின்ற அசுத்த ஆவியுடனே சொன் னான்;. அந்நேரமே அது புறப்பட்டு ப்போயிற்று. அவளுடைய எஜமான் கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவு லையும் சீலாவையும் பிடித்து, சந்தை வெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுபோனார்கள். அதி காரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்க வும் சொல்லி, அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட கட்டளையைப்பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டி ருந்தார்கள். சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்ப டியாக பூமி மிகவும் அதி ர்ந்தது. உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது. எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று.” இந்த சம்பவத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். வஸ்திரங்கள் கிழிக்கப்பட்டு, காயங்களுடன், கால்கள் தொழுமரத்திலே மாட்டி வைக்கப்பட்டிருக்கும் பவும் சீலாவும் சிறைச்சாலையிலிருந்து தேவனைத் துதித்து பாடினார்கள். அங்கே தேவ னுடைய செயலை யாவரும் கண்டு பயந்தார்கள். நாங்கள் இருக்கும் இடத்தையோ அல்லது சுற்றாடலையோ தேவன் பார்ப்பதில்லை. நாங் கள் ஆவியோடும் உண்மையோடும் தேவனை ஆராதிப்பதிலேயே அவர் பிரியப்படுகின்றார். எங்கள் வாழ்கையில் துன்பங்கள், துயரங்கள், க~; டங்கள், பாடுகள் வரலாம். அவைகள் மத்தியிலும், எந்த சூழ்நிலை யிலும் உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி,; தேவனை பாடித் துதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, சூழ்நிலைகளை கண்டு மருளாதபடிக்கு, எல்லா சூழ்நிலைகளிலும் உம்மை பாடித் துதித்து தடையை மேற்கொள்ளும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப் 16:13-33